பக்கம் எண் :

மோசடியான வேலையா 437

Untitled Document
ஏற்படுவதாக இருந்தாலும் அதனால் என்ன   தீங்கு நேர்ந்துவிடும்?”

     “ஆனால் நாமாகப் போய் ஏன் அதிலிருக்கும் தவறை ஏற்றுக்
கொள்ள வேண்டும்?” என்று கேட்டார், பெரிய வக்கீல்.

     “அத்தவறைக் கோர்ட்டு       கண்டு பிடித்துவிடாது, எதிர்த்
தரப்பினரும்       கண்டுகொண்டுவிட மாட்டார்கள் என்பது என்ன
நிச்சயம்?” என்றேன், நான்.

     “ஆனால், இந்த வழக்கின் மீது கோர்ட்டில் விவாதிக்க நீங்கள்
தயாரா? நீங்கள் கூறுகிற வகையில் அந்த வழக்கில் விவாதிக்க நான்
தயாராயில்லை” என்று தீர்மானமாகப்      பதில் சொன்னார் பெரிய
வக்கீல்.

     இதற்கு நான் பணிவுடன் பின்வருமாறு    பதில் சொன்னேன்:
“நீங்கள் விவாதிக்கவில்லையானால், நம்  கட்சிக்காரர் விரும்பினால்,
நான் விவாதிக்கத்                தயாராக இருக்கிறேன். தவறை
ஏற்றுக்கொள்ளாவிட்டால்          இந்த வழக்கில் நான் எந்தவித
சம்பந்தமும் வைத்துக் கொள்ளப் போவதில்லை.”

     இவ்விதம் கூறிவிட்டு என் கட்சிக்காரரைப் பார்த்தேன். அவர்
நிலைமை கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.  ஆரம்பத்திலிருந்தே
நான் இந்த வழக்கை நடத்திவருகிறேன். கட்சிக்காரருக்கு என் மீது
பூரண நம்பிக்கை உண்டு. என்னை அவர் மிக   நன்றாக அறிவார்.
அவர் சொன்னார்: “அப்படியானால் சரி,     வழக்கில் கோர்ட்டில்
நீங்கள் விவாதியுங்கள். தவறையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான்
நம் கதி என்றால் இதில் தோற்றுப்        போனாலும் போகட்டும்.
நியாயத்தைக் கடவுள் பாதுகாப்பார்.”

     நான் ஆனந்தமடைந்தேன். இந்தப் பெருங் குணத்தைத் தவிர
வேறு எதையும் என் கட்சிக்காரரிடம்   நான் எதிர்பார்க்கவில்லை.
பெரிய வக்கீல் என்னை      மீண்டும் எச்சரிக்கை செய்தார். என்
பிடிவாதத்தைக் கண்டு பரிதாபப்பட்டார். ஆனால், அதே சமயத்தில்
எனக்கு வாழ்த்தும் கூறினார்.

     கோர்ட்டில் என்ன நடந்தது            என்பதை அடுத்த
அத்தியாயத்தில் கவனிப்போம்.

45 மோசடியான வேலையா?

     நான் கூறிய யோசனை சிறந்தது        என்பதில் எனக்குச்
சிறிதளவும் சந்தேகமே இல்லை. ஆனால்,        இந்த வழக்கைச்
சரியானபடி நடத்திவிட என்னால் முடியுமா என்று    அதிக தூரம்
ஐயுற்றேன். சுப்ரீம் கோர்டின் முன்பு   இத்தகையதொரு கஷ்டமான
வழக்கில் விவாதிக்க முற்படுவது மிகுந்த   துணிச்சலான காரியமே
என்று எண்ணினேன். பயத்துடன்           நடுங்கிக் கொண்டே
நீதிபதிகளின் முன்பு எழுந்து நின்றேன்.

     கணக்கில் ஏற்பட்டுவிட்ட     தவறைப்பற்றி நான் கூறியதும்