பக்கம் எண் :

கட்சிக்காரர்கள் சகாக்களாயினர் 439

Untitled Document
இடைமறித்துக் கேள்விகள் கேட்டனர்.        மத்தியஸ்தர் தீர்ப்பே
தவறானது என்று கூறி அதைத் தாக்க அந்த வக்கீல் அதிகச் சிரமம்
எடுத்துக்கொண்டார். ஆனால், ஆரம்பத்தில்    என்னிடம் சந்தேகம்
கொண்ட நீதிபதி, இப்பொழுது நிச்சயமாக என்   கட்சிக்குத் திரும்பி
விட்டார்.

     கணக்கிலிருந்த தவறை ஸ்ரீகாந்தி,  ஒப்புக்கொண்டிருக்கவில்லை
என்று வைத்துக்கொள்ளுவோம். அப்பொழுது        நீங்கள் என்ன
செய்திருப்பீர்கள்?” என்று நீதிபதி, அவரைக் கேட்டார்.

     “நாங்கள் நியமித்தவரைவிட        அதிகத் திறமை வாய்ந்த,
யோக்கியமான கணக்கர் வேறு யாரும்  எங்களுக்குக் கிடைத்திருக்க
மாட்டார்” என்றார், அந்த வக்கீல்.

     “உங்கள் கட்சி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்
என்றே கோர்ட்டு எண்ண வேண்டும்.      நிபுணராக உள்ள எந்தக்
கணக்கரும் செய்துவிடக்கூடிய      தவறைத் தவிர வேறு எதையும்
உங்களால் குறிப்பிட முடியவில்லை      என்றால் வெளிப்படையான
இந்தத்  தவறுக்காகத் திரும்பவும் புதிதாக வழக்கை நடத்தும் படியும்,
புதிதாகச் செலவு செய்யுமாறும் கட்சிக்காரர்களைக் கட்டாயப்படுத்தக்
கோர்ட்டு  விரும்பவில்லை. இச்சிறு தவறை எளிதில் திருத்திவிடலாம்
என்று    இருக்கும்போது இவ்வழக்கை மறு விசாரணைக்கு அனுப்ப
நாங்கள் உத்தரவிட வேண்டியிருக்காது”         என்று தொடர்ந்து
சொன்னார், நீதிபதி.

     இவ்வாறு எதிர்த்   தரப்பு வக்கீலின் ஆட்சேபம் நிராகரிக்கப்
பட்டது. கணக்குத்      தவறைத் தானே திருத்திவிட்டு மத்தியஸ்தர்
தீர்ப்பைக் கோர்ட்டு     ஊர்ஜிதம் செய்ததா அல்லது திருத்தும்படி
மத்தியஸ்தருக்கு உத்தரவிட்டதா         என்பது எனக்குச் சரியாக
நினைவில் இல்லை.

     நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.      என் கட்சிக்காரரும்,
எங்கள் பெரிய வக்கீலும்கூட, மகிழ்ச்சி அடைந்தனர்.  உண்மைக்கு
விரோதமில்லாமல்   வக்கீல் தொழிலை நடத்துவது அசாத்தியமானது
அல்ல என்ற என் நம்பிக்கையும் உறுதியாயிற்று.

     ஆனால், ஒரு விஷயத்தை வாசகர்       நினைவில் வைக்க
வேண்டும். வக்கீல் தொழிலை        நடத்துவதில் உண்மையோடு
நடந்துகொண்டாலும்,              அத்தொழிலைச் சீரழித்துவரும்
அடிப்படையான குறைபாட்டைப் போக்கிவிட முடியாது.

46 கட்சிக்காரர்கள் சகாக்களாயினர்

     நேட்டாலில் வக்கீல் தொழில் நடத்துவதற்கும், டிரான்ஸ்வாலில்
அத்தொழிலை நடத்துவதற்கும் வித்தியாசம் உண்டு.     நேட்டாலில்
வக்கீல் தொழில்      கூட்டானது. ஓர் அட்வகேட்டின் ஸ்தானத்தில்
ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு பாரிஸ்டர்,