பக்கம் எண் :

கட்சிக்காரரைக் காப்பாற்றிய விதம்441

Untitled Document
யாராவது வக்கீலிடம் கலந்து     ஆலோசிக்கும்படி கட்சிக்காரரிடம்
கூறிவிடுவேன். என்னையே வக்கீலாக   வைத்துக்கொள்ளவேண்டும்
என்று கட்சிக்காரர்    பிடிவாதமாக  விரும்பினால் பெரிய வக்கீலை
உதவிக்கு வைத்துக்கொள்ள          அக்கட்சிக்காரரிடம் அனுமதி
கேட்பேன். ஒளிவு மறைவில்லாத என்னுடைய இந்த  நடத்தையினால்
கட்சிக்காரர்களின் அளவற்ற          அன்பிற்கும் நம்பிக்கைக்கும்
பாத்திரமானேன். பெரிய வக்கீலின்        யோசனையைக் கேட்பது
அவசியம் என்று  இருக்கும்போதெல்லாம் அதற்குள்ள கட்டணத்தைக்
கொடுக்க அவர்கள் எப்பொழுதும்     தயாராய் இருந்தார்கள். இந்த
அன்பும் நம்பிக்கையும்        பொது வேலைகளில்  எனக்கு அதிக
உதவியாக இருந்தன.

     தென்னாப்பிரிக்காவில் நான் வக்கீல் தொழில் செய்து வந்ததன்
நோக்கம் சமூகத்திற்குச்       சேவை செய்வதே என்பதை முந்திய
அத்தியாயங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.        இக்காரியத்திற்கும்
மக்களின் நம்பிக்கையைப்         பெறுவது இன்றியமையாததாகும்.
பணத்திற்காக வக்கீல் தொழில்       நான் செய்த வேலைகளையும்,
சேவை என்றே, பெரிய மனம் படைத்த    இந்தியர் மிகைப்படுத்திக்
கொண்டனர். தங்களுடைய         உரிமைகளுக்காகச் சிறைவாசக்
கஷ்டத்தையும் ஏற்குமாறு     நான் அவர்களுக்கு யோசனை கூறிய
போது, அவர்களில் அநேகர் என்     யோசனையை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள்      இவ்விதம் செய்தது, என் மீது
அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையினாலும் அன்பினாலுமே அன்றி,
அம் முறையே சரியானது என்று அவர்கள்     ஆராய்ந்து பார்த்து
முடிவுக்கு வந்ததனால் அன்று.

     இதை நான் எழுதும்போது         இனிமையான நினைவுகள்
எத்தனையோ என் உள்ளத்தில் எழுகின்றன.    நூற்றுக் கணக்கான
கட்சிக்காரர்கள் என் நண்பர்களாகவும் பொதுச்     சேவையில் சக
ஊழியர்களாகவும் ஆயினர்.          துன்பங்களும் அபாயங்களும்
நிறைந்திருந்த வாழ்க்கையை அவர்களின்   கூட்டுறவு இனிதாக்கியது.

47 கட்சிக்காரரைக் காப்பாற்றிய விதம்

     பார்ஸி ருஸ்தம்ஜியின் பெயர்         இதற்குள் வாசகருக்குப்
பழக்கமான பெயராகியிருக்கும்.            அவர் உடனடியாக என்
கட்சிக்காரராகவும் சக ஊழியராகவும்    ஆகிவிட்டவர்களில் ஒருவர்
முதலில் அவர் என் சக ஊழியராகி,            அதன் பிறகு என்
கட்சிக்காரரானார் என்று சொல்வதே   உண்மையாகவும் இருக்கலாம்.
அதிக அளவு       நான் அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகி
விட்டேன். அதனால், அவர் தமது சொந்தக் குடும்ப   விஷயங்களில்
கூட என் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்து    வந்தார்.
எங்கள் இருவரின் வாழ்க்கை முறைக்கும் அதிக வித்தியாசம்