பக்கம் எண் :

448சத்திய சோதனை

Untitled Document
பேசப்படுவதைக் குறித்து என்னுடைய  பணிவான ஆட்சேபத்தையும்
தெரிவித்துக் கொண்டேன். ஏனெனில்,   நீண்டநாள் வெளிநாடுகளில்
இருந்துவிட்டுத்      திரும்பியிருக்கும் ஒருவன், நீண்ட காலமாகவே
வழக்கமாகப் போய்விட்ட காரியங்களைக்    கண்டிப்பது மரியாதைக்
குறைவான செய்கை என்று           கருதப்பட்டு விடுமோ என்று
அஞ்சினேன். குஜராத்தியிலேயே பதிலளிப்பது       என்பதில் நான்
பிடிவாதமாக இருந்ததைக் குறித்து யாரும்        தவறாக எண்ணிக்
கொண்டதாகத் தோன்றவில்லை.             ஒவ்வொருவரும் என்
கண்டனத்தைக் குறித்துத்         தாங்களே சமாதானமடைந்தார்கள்
என்பதைக் கண்டு உண்மையில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.

     புது மாதிரியான என்னுடைய      எண்ணங்களை என் நாட்டு
மக்களின் முன்பு கொண்டுவருவதில் எனக்குக் கஷ்டம் இராது என்று
எண்ண அக்கூட்டம் எனக்குத்    தைரியமளித்தது. பம்பாயில் சிறிது
காலம் தங்கி, இவ்விதமான ஆரம்ப       அனுபவங்களை நிறையப்
பெற்றுப் புனாவுக்குச் சென்றேன்.       அங்கே வருமாறு கோகலே
என்னை அழைத்திருந்தார்.

2 புனாவில் கோகலேயுடன்

     கவர்னர் என்னைப்பார்க்க விரும்புகிறார் என்று நான் பம்பாய்
வந்து சேர்ந்ததுமே   கோகலே எனக்குத் தகவல் அனுப்பியிருந்தார்.
நான் புனாவுக்குப்   புறப்படுவதற்கு முன்னால் கவர்னரைப் போய்ப்
பார்த்துவிட்டு வருவது நல்லது என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி
கவர்னரைப் போய்ப் பார்த்தேன்.   சுகங்களைக் குறித்து வழக்கமாக
விசாரிப்பது முடிந்த பிறகு என்னிடம்,      “உங்களை நான் ஒன்று
கேட்டுக் கொள்ளுகிறேன்.     அரசாங்க சம்பந்தமாக நீங்கள் எந்த
நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளுவதற்கு       முன்னால் நீங்கள்
என்னை வந்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

     அதற்கு நான் பின்வருமாறு      பதில் சொன்னேன்: “அந்த
வாக்குறுதியை எளிதில் நான்        உங்களுக்கு அளிக்க முடியும்.
ஏனெனில், எதிராளியின் கருத்து இன்னது       என்பதை அறிந்து
கொண்டு, சாத்தியமான வரையில்       அவருடன் ஒத்துப்போவது
என்பதே சத்தியாக்கிரகி என்ற முறையில்  என்னுடைய தருமமாகும்.
இந்தத் தருமத்தைத்  தென்னாப்பிரிக்காவில் கண்டிப்பான வகையில்
அனுசரித்து வந்தேன். இங்கும்        அப்படியே செய்வதென்றும்
இருக்கிறேன்.”

     லார்டு வில்லிங்டன் எனக்கு நன்றி       தெரிவித்துவிட்டுக்
கூறியதாவது: “நீங்கள் விரும்பும்போதெல்லாம்  என்னிடம் வரலாம்.
என் அரசாங்கம் வேண்டுமென்று     எந்தத் தவறையும் செய்யாது
என்பதை நீங்கள் காண்பீர்கள்.”

     அதன் பிறகு நான் புனாவுக்குப் போனேன்.   அந்த அருமை