பக்கம் எண் :

450சத்திய சோதனை

Untitled Document
இருந்தாலும் சரி, உங்கள் ஆசிரமத்தை என் சொந்த ஆசிரமமாகவே
கருதுவேன். ஆசிரமத்தின் செலவுக்கு         நீங்கள் என்னையே
எதிர்பார்க்க வேண்டும்.”

     இதைக் கேட்டு நான் அளவுகடந்த  ஆனந்தமடைந்தேன் நிதி
திரட்டும் பொறுப்பிலிருந்து விடுபடுவது   ஓர் ஆனந்தமே. அதோடு,
நான் தன்னந்தனியாக இந்த   வேலையில் ஈடுபட வேண்டியதில்லை
என்றும், எனக்குக் கஷ்டம் ஏற்படும்போது      நிச்சயமான துணை
எனக்கு இருக்கிறது என்றும்        எண்ணிய போது பெரிய பாரம்
நீங்கியதுபோல இருந்தது.

     ஆகவே, காலஞ்சென்ற டாக்டர் தேவ்  என்பவரைக் கோகலே
அழைத்து எனக்காகச் சங்கத்தில்       கணக்கு வைக்கும் படியும்,
ஆசிரமத்திற்கும் பொதுச் செலவிற்கும்  எனக்குத் தேவைப்படுவதை
எல்லாம் கொடுக்கும்படியும் கூறினார்.

     அதன் பிறகு சாந்திநிகேதனத்திற்குப்  புறப்படத் தயாரானேன்.
நான் புறப்படுவதற்கு முன்னால் கோகலே     எனக்கு ஒரு விருந்து
வைத்தார். அதற்குக் குறிப்பிட்ட       சில நண்பர்களை மாத்திரம்
அழைத்திருந்ததோடு எனக்குப்        பிடித்தமான பழங்களுக்கும்,
கொட்டைப் பருப்புகளுக்கும் ஏற்பாடு செய்து இருந்தார். அவருடைய
அறையிலிருந்து சில அடி தூரத்திலேயே    இந்த விருந்து நடந்தது.
என்றாலும், அந்தக் கொஞ்ச தூரமும் நடந்துவந்து    அவ்விருந்தில்
கலந்துகொள்ள முடியாத நிலையில்      அவர் இருந்தார். ஆனால்,
என்னிடம் கொண்டிருந்த             அன்பினால் அதை எல்லாம்
பொருட்படுத்தாமல் விருந்துக்கு   வந்தே தீருவதென்று பிடிவாதமாக
இருந்தார்.           அப்படியே வந்தும் விட்டார். ஆனால், அவர்
மூர்ச்சையடைந்து விடவே அவரைத் தூக்கிச் செல்லும்படி நேர்ந்தது.
இவ்விதம் அவர் மூர்ச்சையடைந்து விடுவது      புதிதல்ல. எனவே,
தமக்குப் பிரக்ஞை வந்ததும் விருந்தைத் தொடர்ந்து     நடத்தும்படி
எங்களுக்குச் சொல்லி அனுப்பினார்.

     இந்த விருந்து, சங்கத்தின்      விருந்தினர் விடுதிக்கு எதிரில்
திறந்த வெளியில்,             நண்பர்களுடன் கலந்து பேசுவதற்கு
வாய்ப்பளிப்பதற்காக நடந்ததேயன்றி வேறன்று.    அதில் நண்பர்கள்
நிலக்கடலை, பேரீச்சம்பழம்,           மற்றும் பழங்கள் இவற்றைச்
சாப்பிட்டுக்கொண்டே ஒருவருக்கொருவர் மனம்    விட்டுப் பேசினர்.
ஆனால், திடீரென்று          கோகலே மூர்ச்சை அடைந்தது, என்
வாழ்க்கையில் சாதாரணமான சம்பவமாகி விடவில்லை.

3 அது ஒரு பயமுறுத்தலா?

     புனாவிலிருந்து ராஜ்கோர்ட்டுக்கும் போர்பந்தருக்கும் போனேன்.
காலஞ்சென்ற என்              சகோதரரின் மனைவியையும் மற்ற
உறவினர்களையும் பார்ப்பதற்கே அங்கே சென்றேன்.