பக்கம் எண் :

ஆரம்பக் கஷ்டங்கள்475

Untitled Document
ஓர் ஒழுக்க முறையாக இருக்க முடியாதெனினும் இதை அடைவதற்கு
மற்ற ஒழுக்க முறைகளை அனுசரிப்பது அவசியமாகும்.  மோட்சத்தை
அடைய விரும்புகிறவரின்,             அல்லது  ஒரு தொண்டரின்
நடவடிக்கைகளில்       அடக்கமோ,        அகந்தையின்மையோ
இல்லையென்றால், மோட்சத்திலோ அல்லது தொண்டிலோ  அவருக்கு
ஆர்வம் இல்லை என்றே ஆகும். அடக்கமில்லாத சேவை, சுயநலமும்
அகம்பாவமுமே அன்றி வேறல்ல.

     அச்சமயத்தில் எங்கள் கோஷ்டியில்   பதின்மூன்று தமிழர்கள்
இருந்தார்கள். ஐந்து தமிழ் இளைஞர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து
என்னுடன் வந்தவர்கள். மற்றவர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும்
வந்து சேர்ந்தனர். நாங்கள் மொத்தம் ஆண்களும்    பெண்களுமாக
இருபத்தைந்து பேர்.

     இவ்வாறே ஆசிரமம்        ஆரம்பமாயிற்று. எல்லோருக்கும்
பொதுவான ஒரே சமையலுடன் ஒரே     குடும்பமாக வாழ முயன்று
வந்தோம்.

10 ஆரம்பக் கஷ்டங்கள்

     ஆசிரமம் ஆரம்பமாகிச் சில  மாதங்களே ஆயிற்று. அதற்குள்
நான் எதிர்பார்த்தே        இராத வகையில் நாங்கள் சோதனைக்கு
ஆளானோம். அமிர்தலால் தக்கரிடமிருந்து பின்வருமாறு ஒரு கடிதம்
வந்தது: “அடக்கமும் நேர்மையும் உள்ள        ஒரு தீண்டாதாரின்
குடும்பம் உங்கள் ஆசிரமத்தில்   சேர்ந்துகொள்ள    விரும்புகிறது.
அவர்களை நீங்கள்               ஏற்றுக் கொள்வீர்களா?” நான்
கலக்கமடைந்தேன்.     தீண்டாதாரின் குடும்பம் ஒன்று, தக்கர் பாபா
போன்ற ஒரு முக்கியமானவரிடமிருந்து      அறிமுகக் கடிதத்துடன்
எங்கள் ஆசிரமத்தில் சேர    மனுச் செய்துகொள்ளும் என்று நான்
எதிர்பார்க்கவே இல்லை.     அக்கடிதத்தை என்   சகாக்களுக்குக்
காட்டினேன். அவர்கள் அதை வரவேற்றார்கள்.

     அமிர்தலால் தக்கருக்குப் பதில் எழுதினேன்.அக்குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் எல்லோருமே ஆசிரமத்தின்   விதிகளுக்கு உட்பட்டு
நடக்கச் சம்மதிப்பதாக இருந்தால் அக் குடும்பத்தை ஏற்றுக்கொள்ளத்
தயாராக இருக்கிறோம் என்று அவருக்குத் தெரிவித்தேன்.

     தூதாபாய், அவருடைய மனைவி தானிபென்,     அப்பொழுது
தவழும் குழந்தையாக இருந்த            அவர்கள் பெண் லட்சுமி
ஆகியவர்களைக் கொண்டது அக்குடும்பம். தூதாபாய்    பம்பாயில்
உபாத்தியாயராக இருந்தார். விதிகளுக்கு உட்பட்டு   நடந்துகொள்ள
அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். நாங்களும்     அவர்களை ஏற்றுக்
கொண்டோம்.

     ஆனால், அவர்களைச் சேர்த்துக்கொண்டது,   ஆசிரமத்திற்கு
உதவி செய்து வந்த நண்பர்களிடையே பெரும் பரபரப்பை