பக்கம் எண் :

வழக்கு வாபசாயிற்று495

Untitled Document
இந்தத் தரிசனத்தை நான் பெறுவதற்கு   என்னை உரியவனாக்கியது
எது என்பதை நான் ஆராயும்போது, மக்களிடம் கொண்ட அன்பைத்
தவிர வேறு எதுவும் அல்ல  என்பதைக் காண்கிறேன். இந்த அன்பு,
அகிம்சையில் நான் கொண்டிருக்கும் அசைக்க  முடியாத உறுதியின்
வெளித் தோற்றமேயன்றி வேறு அன்று.

     சம்பாரணில் அந்த நாள்,      என் வாழ்க்கையில் மறக்கவே
முடியாத நாள்; விவசாயிகளுக்கும்         எனக்கும் அது மிகவும்
முக்கியமான நாளாகும்.

     சட்டப்படி விசாரணைக்கு       உட்பட வேண்டியவன் நான்.
ஆனால், உண்மையில், குற்றவாளியின்       கூண்டில் ஏறி நின்றது
அரசாங்கமே என்று சொல்ல வேண்டும்.         என்னைப் பிடிக்க
விரித்திருந்த வலையில்          அரசாங்கம் சிக்கிக்கொள்ளும்படி
செய்வதிலேயே கமிஷனர் வெற்றி பெற்றார்.

15 வழக்கு வாபசாயிற்று

     விசாரணை ஆரம்பமாயிற்று.  அரசாங்க வக்கீல், மாஜிஸ்டிரேட்
முதலிய அதிகாரிகள் எல்லாம்      திகைத்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன செய்வதென்பதே     அவர்களுக்குப் புரியவில்லை. வழக்கை
ஒத்தி வைத்து விடும்படி மாஜிஸ்டி ரேட்டை      அரசாங்க வக்கீல்
வற்புறுத்திக் கொண்டிருந்தார்.       ஆனால், நான்  குறுக்கிட்டேன்.
சம்பாரணை விட்டுப் போய் விடவேண்டும் என்ற   உத்தரவை மீறிய
குற்றத்தை நான் செய்திருப்பதாக     ஒப்புக்கொள்ள விரும்புகிறேன்.
ஆகையால்,             வழக்கை ஒத்தி வைக்கவேண்டாம் என்று
மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொண்டேன்.  பின்வருமாறு சுருக்கமாக
என் வாக்குமூலத்தையும் படித்தேன்:

     “கி. பு. கோ. 144-வது பிரிவின் கீழே  பிறப்பிக்கப்பட்ட தடை
உத்தரவை நான் மீறிவிட்டதாகத் தோன்றும்       இக் கடுமையான
நடவடிக்கையை நான் ஏன்    மேற்கொண்டேன் என்பதைக் காட்ட,
கோர்ட்டாரின்             அனுமதியின் பேரில், சுருக்கமான ஒரு
வாக்குமூலத்தைக்             கொடுக்க விரும்புகிறேன். உள்ளூர்
அதிகாரிகளுக்கும்   எனக்கும் உள்ள மாறுபட்ட அபிப்பிராயத்தைப்
பற்றிய விஷயமே இது என்பதுதான்           என் தாழ்மையான
அபிப்பிராயம். ஜீவ காருண்ய,      தேசிய சேவை செய்வது என்ற
நோக்கத்தின் பேரில்       நான் நாட்டில் பிரவேசித்தேன். அவுரித்
தோட்ட முதலாளிகள் தங்களை ஒழுங்காக    நடத்தவில்லை என்று
விவசாயிகள் திடமாகக் கூறுகின்றனர்.         வந்து உதவி செய்ய
வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி  அழைத்ததன் பேரில் நான்
இங்கே வந்தேன். பிரச்னையை         ஆராய்ந்து பாராமல் நான்
எந்தவிதமான      உதவியையும் செய்துவிட முடியாது. ஆகையால்,
சாத்தியமானால் அரசாங்க நிர்வாகிகள்,       தோட்ட முதலாளிகள்