பக்கம் எண் :

ஆசிரமத்தில் கண்ணோட்டம் 513

Untitled Document
ஜீவனத்தை நடத்திக்கொள்ள வேண்டும்.

     வேலை நிறுத்தத் தலைவர்கள்,   இந்த நிபந்தனைகளை நன்கு
அறிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார்கள்.      தங்கள் கோரிக்கைகள்
அங்கீகரிக்கப்படும் வரையில்,    அல்லது இத் தகராறை மத்தியஸ்தர்
முடிவுக்கு விட மில்காரர்கள்        சம்மதிக்கும் வரையில், தாங்கள்
வேலைக்குத் திரும்புவதில்லை என்று      தொழிலாளர்கள்  பொதுக்
கூட்டத்தில் பிரதிக்ஞை செய்துகொண்டனர்.

     இந்த வேலை நிறுத்தத்தின் போதுதான்        ஸ்ரீ வல்லபாய்
பட்டேலையும்          ஸ்ரீ சங்கரலால் பாங்கரையும் நான் நன்றாக
அறியலானேன். ஸ்ரீமதி அனுசூயா பாயை இதற்கு     முன்னாலேயே
எனக்கு நன்றாகத் தெரியும்.

     சபர்மதி நதிக்கரையில் ஒரு மரத்தின் நிழலில் தினமும் வேலை
நிறுத்தக்காரர்களின்           பொதுக்கூட்டத்தை நடத்தி வந்தோம்.
இக்கூட்டங்களுக்குத்    தொழிலாளர் ஆயிரக்கணக்கில் வருவார்கள்.
என்னுடைய பேச்சில், அவர்களுடைய    பிரதிக்ஞையைக் குறித்தும்,
அமைதியையும் சுயமதிப்பையும் காப்பாற்ற வேண்டிய   பொறுப்பைப்
பற்றியும் அவர்களுக்கு ஞாபகமூட்டி வந்தேன்.   இத்தொழிலாளர்கள்
தினமும் நகரின் தெருக்களில், ‘பிரதிக்ஞையை அனுசரியுங்கள்’ என்று
எழுதிய கொடியுடன் அமைதியாக ஊர்வலம் வருவார்கள்.

     வேலை நிறுத்தம்        இருபத்தொரு நாள் நடந்தது. வேலை
நிறுத்தம் நடந்து கொண்டிருந்தபோது,  அப்போதைக்கப்போது ஆலை
முதலாளிகளைச் சந்தித்துத் தொழிலாளருக்கு நியாயத்தைச் செய்யும்படி
கேட்டுக் கொண்டேன். “எங்களுக்கும் ஒரு பிரதிக்ஞை உண்டு” என்று
அவர்கள் சொன்னார்கள்.        அவர்கள் மேலும்    கூறியதாவது:
“எங்களுக்கும்   தொழிலாளருக்கும் இருக்கும் உறவு, பெற்றோருக்கும்
குழந்தைகளுக்கும் உள்ள             உறவைப்போன்றது. ஆகவே,
மூன்றாமவர்கள் இதில்      தலையிடுவதை நாங்கள் எவ்வாறு சகிக்க
முடியும்? மத்தியஸ்தத்திற்குதில் எங்கே இடமிருக்கிறது?”

21 ஆசிரமத்தில் கண்ணோட்டம்

     தொழிலாளர் தகராறைப் பற்றி     நான் மேலே விவரிப்பதற்கு
முன்னால், ஆசிரம விஷயத்தைக் குறித்தும்     ஒரு கண்ணோட்டம்
செலுத்துவது முக்கியமாகும். சம்பாரணில்       நான் இருந்த சமயம்
முழுவதிலும், ஆசிரமம் என்   மனத்தை விட்டு விலகினதே இல்லை.
அவசரமாகச் சில சமயம்         அங்கே போய்ப் பார்த்து விட்டும்
வருவேன்.

     அச்சமயம் ஆசிரமம்        அகமதாபாத்திற்கு அருகிலுள்ள
கோச்ராப் என்ற சிறு கிராமத்தில் இருந்தது.  இக்கிராமத்தில் பிளேக்
நோய் உண்டாயிற்று. அதனால், ஆசிரமக் குழந்தைகளுக்கு ஆபத்து