பக்கம் எண் :

532சத்திய சோதனை

Untitled Document
பிரிட்டிஷ் பத்திரிகைகள் என்ன      கூறுகின்றன என்பதை நானும்
படித்தேன். இந்தப் பத்திரிகைகள் கூறுவதற்குமேல்  எனக்கு எதுவும்
தெரியாது என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். அதோடு, அடிக்கடி
பத்திரிகைகள் கதை கட்டிவிடுகின்றன         என்பதையும் நீங்கள்
அறிவீர்கள். பத்திரிகைச்        செய்திகளை மாத்திரம் ஆதாரமாக
வைத்துக் கொண்டு இது போன்ற    ஒரு நெருக்கடியான சமயத்தில்
சாம்ராஜ்யத்திற்கு உதவி செய்ய நீங்கள் மறுக்கலாமா? இன்று அல்ல.
இந்த யுத்தம்         முடிந்த பிறகு, எந்தத் தார்மிகப் பிரச்னையில்
வேண்டுமானாலும் உங்கள் இஷ்டப்படி   நீங்கள் ஆட்சேபங்களைக்
கிளப்பி எங்களுக்குச் சவால் விடலாம்.”

     வாதம் புதியது அன்று. ஆனால்,   கூறப்பட்ட முறையினாலும்,
கூறப்பட்ட நேரத்தின் காரணமாகவும்       அது புதிதாக எனக்குத்
தோன்றியது. மகாநாட்டில் கலந்து   கொள்ளுவதற்கும் சம்மதித்தேன்.
முஸ்லிம்களின் கோரிக்கையைப்   பொறுத்த வரையில் வைசிராய்க்கு
நான் கடிதம் எழுதுவது என்பதும் முடிவாயிற்று.

27 படைக்கு ஆள் திரட்டல்

     ஆகவே நான் மகாநாட்டிற்குச் சென்றேன்.    படைக்கு ஆள்
திரட்டுவது சம்பந்தமான தீர்மானத்தை    நான் ஆதரிக்க வேண்டும்
என்பதில்            வைசிராய் அதிகச்  சிரத்தையுடன் இருந்தார்.
ஹிந்துஸ்தானியில் நான் பேச        அனுமதிக்க வேண்டும் என்று
கேட்டேன். என்      கோரிக்கைக்கு வைசிராய் அனுமதியளித்தார்.
ஆனால்,   நான் ஆங்கிலத்திலும் பேச வேண்டும் என்று யோசனை
கூறினார். நான் நீளமான         பிரசங்கம் செய்ய எண்ணவில்லை.
பேசினேன். “என் பொறுப்பைப் பூரணமாக        உணர்ந்தே நான்
இத்தீர்மானத்தை ஆதரிக்கிறேன்” என்ற    ஒரே வாக்கியமே நான்
பேசியது.

     ஹிந்துஸ்தானியில் நான்      பேசியதற்காகப் பலர் என்னைப்
பாராட்டினார்கள். இத்தகைய கூட்டத்தில் ஹிந்துஸ்தானியில் பேசியது
அதுவே முதல் தடவை என்றும்           அவர்கள் கூறினார்கள்.
இப்பாராட்டுக்களும், வைசிராய் கூட்டமொன்றில்   ஹிந்துஸ்தானியில்
முதல் முதல் பேசியது     நானே என்பது கண்டு பிடிக்கப்பட்டதும்,
என்னுடைய தேசிய      கௌரவத்தைப் பாதித்தன. எனக்கு நானே
குன்றிப் போய்விட்டதாக உணர்ந்தேன்.  நாட்டில், நாடு சம்பந்தமான
வேலையைப் பற்றிய              கூட்டங்களில், நாட்டின் மொழி
தடுக்கப்பட்டிருப்பதும், என்னைப் போன்ற யாரோ   ஒருவர் அங்கே
ஹிந்துஸ்தானியில் பேசிவிட்டது        பாராட்டுதற்குரிய விஷயமாக
இருப்பதும், எவ்வளவு பெரிய துக்ககரமான விஷயம்! நாம் எவ்வளவு
இழிவான நிலைமையை அடைந்திருக்கிறோம் என்பதை  இதுபோன்ற
சம்பவங்கள் நினைவூட்டுகின்றன.