பக்கம் எண் :

534சத்திய சோதனை

Untitled Document
இரவுப் பிரயாணமாக இருந்தும்    இன்டர் வகுப்பிலேயே சென்றார்.
அவருடைய எளிமையும், நேரிய,  ஒளிவு மறைவு இல்லாத போக்கும்
என்னைக் கவர்ந்துவிட்டன.       இவ்விதம் தூய்மையான உள்ளம்
படைத்த ஒருவர் மூலம்            அனுப்பப் பெற்ற கடிதம், நான்
எண்ணியவாறே விரும்பிய பலனைத் தந்தது.   அது என் மனத்திற்கு
ஆறுதல்        அளித்ததோடு நான் செல்ல வேண்டிய வழியையும்
தெளிவுபடுத்தியது.

     செய்வதாக நான் ஏற்றுக்கொண்ட கடமையின் மற்றொரு பகுதி,
படைக்கு ஆள் திரட்டுவது.   இந்த வேலையைக் கேடாவைத் தவிர
நான் வேறு எங்கே ஆரம்பிப்பது?          முதலில் சைனியத்தில்
சேருபவராக இருக்கும்படி என் சொந்த சக    ஊழியர்களைத் தவிர
வேறு யாரை நான் அழைக்க முடியும்?      ஆகவே, நதியாத்துக்கு
நான் போனதுமே வல்லபாயையும் மற்ற நண்பர்களையும் அழைத்துப்
பேசினேன். அவர்களில் சிலர்,        என் யோசனையை எளிதில்
ஏற்றுக்கொண்டு                    விடவில்லை. என் யோசனை
பிடித்திருந்தவர்களுக்கோ, அது வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம்
இருந்தது. எந்த வகுப்பினருக்கு        நான் கோரிக்கை வெளியிட
விரும்பினேனோ அந்த    வகுப்பாருக்கு அரசாங்கத்தினிடம் அன்பு
இல்லை. அரசாங்க அதிகாரிகளிடம் அவர்கள்   அடைந்த கசப்பான
அனுபவம் அவர்கள் மனத்தில் இன்றும் அப்படியே இருந்து  வந்தது.

     என்றாலும்,         வேலையைத் தொடங்குவதற்கு அவர்கள்
ஆதரவாக இருந்தார்கள்.    என் வேலையை நான் ஆரம்பித்ததுமே
என் கண்கள் திறந்துவிட்டன. நான்       கொண்டிருந்த நம்பிக்கை,
பயங்கரமான அதிர்ச்சியை அடைந்தது. நிலவரிப்    போராட்டத்தின்
போது மக்கள்      தங்கள்        வண்டிகளை வாடகை வாங்கிக்
கொள்ளாமலேயே     தாராளமாகக் கொடுக்க முன்வந்தார்கள். ஒரு
தொண்டர் வேண்டுமென்றபோது,    இரண்டு பேர் தொண்டர்களாக
வந்தார்கள். அப்படியிருக்க இப்பொழுதோ வாடகைக்கும் ஒரு வண்டி
கிடைக்கவில்லையென்றால் தொண்டர்கள்    விஷயத்தைச் சொல்லத்
தேவையில்லை. ஆயினும், நாங்கள்          அதைரியம் அடைந்து
விடவில்லை.      வண்டிகளில் போவது என்பதையே விட்டு விட்டு
நடந்தே     பிரயாணம் செய்வது என்று தீர்மானித்தோம். இவ்விதம்
நாங்கள் தினம் இருபது மைல்      நடக்க வேண்டியவர்களானோம்.
வண்டியே கிடைப்பதில்லையென்றால்,     அம் மக்கள் எங்களுக்குச்
சாப்பாடு போடுவார்கள் என்று        எதிர்பார்ப்பது வீண் வேலை.
சாப்பாடு போடுமாறு கேட்பதும்       சரியல்ல. ஆகவே, ஒவ்வொரு
தொண்டரும்            தமக்கு வேண்டிய  சாப்பாட்டைக் கையில்
எடுத்துக்கொள்ள வேண்டும்          என்று தீர்மானித்தோம். அது
கோடைக்காலம். ஆகையால் படுக்கையோ, போர்வையோ