பக்கம் எண் :

ரௌலட் மசோதாக்கள் : என் மனக்குழப்பம் 545

Untitled Document
செய்ய முடியாது போனது, எங்கள்   இருவருக்குமே பரிதாபகரமான
விஷயமாகும். ஒரு       குறிப்பிட்ட அளவு வரையில், அவருடைய
சிகிச்சை முறையை            நான் நம்புகிறேன். ஆனால், அவர்
அவசரப்பட்டே சில           முடிவுகளுக்கு வந்துவிட்டார் என்று
அஞ்சுகிறேன்.

     அவர் கண்டுபிடித்திருப்பவைகளின்  குணாதிசயங்கள் எதுவாக
இருந்தாலும், என் உடலில் அவற்றைப்    பரிசோதிக்க அவரை நான்
அனுமதித்தேன். உடலுக்கு வெளியில்   செய்யும் சிகிச்சையைப் பற்றி
எனக்கு ஆட்சேபமில்லை.         உடம்பு முழுவதற்கும் பனிக்கட்டி
வைத்துக்கட்டுவதே             அவருடைய சிகிச்சை அவருடைய
சிகிச்சையினால் என்  உடம்பில் ஏற்பட்ட குணத்தைக் குறித்து அவர்
சொல்லிக்கொண்டதை அங்கீகரிக்க      என்னால் முடியாவிட்டாலும்,
எனக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் பலத்தையும்     என்னுள் அது
நிச்சயமாக உண்டாக்கியது.    இயற்கையாகவே மனநிலை உடம்பிலும்
பிரதிபலித்தது. எனக்குப்     பசியெடுக்க ஆரம்பித்தது. ஐந்து முதல்
பத்து          நிமிடங்கள் வரை மெல்ல நடக்கவும் தொடங்கினேன்.
அப்பொழுது அவர் என் ஆகாரத்தில்      ஒரு சீர்திருத்தம் செய்ய
யோசனை கூறினார்.        அவர் கூறியதாவது:    “நீங்கள் பச்சை
முட்டைகளைச் சாப்பிட்டால் அதிகச் சக்தியைப் பெற்றுச் சீக்கிரமாகப்
பழைய பலத்தை அடைவீர்கள்      என்று உறுதியாகக் கூறுகிறேன்.
முட்டைகள், பாலைப்   போலத் தீங்கில்லாதவை. நிச்சயமாக முட்டை
புலால் ரகத்தைச் சேர்ந்ததல்ல.        முட்டைகள் எல்லாமே குஞ்சு
பொரிக்கக் கூடியவை அல்ல என்பது      உங்களுக்குத் தெரியுமா?
அவ்விதம் குஞ்சு       பொரிக்காதவைகளாக்கப்பட்ட முட்டைகளும்
விற்கின்றன.”           என்றாலும்,      குஞ்சு பொரிக்காதவைகள்
ஆக்கப்பட்டுவிட்ட முட்டைகளைச்  சாப்பிடவும் நான் தயாராயில்லை.
ஆனால், என் உடல் நிலையில்      ஏற்பட்ட அபிவிருத்தி, பொதுக்
காரியங்களில் நான்      சிரத்தை கொள்ளுவதற்குப் போதுமானதாக
இருந்தது.

29 ரௌலட் மசோதாக்கள் : என் மனக்குழப்பம்

     மாதேரானுக்குப் போய் அங்கே தங்கினால்,   சீக்கிரத்தில் என்
உடம்பு தேறும் என்று     டாக்டர்களும் நண்பர்களும் கூறினார்கள்.
ஆகவே, நான் அங்கே போனேன்.  ஆனால், மாதேரானில் தண்ணீர்
உப்பாக இருந்ததால் அங்கே     நான் தங்குவது கஷ்டமாகிவிட்டது.
வயிற்றுக் கடுப்பு நோய் ஏற்பட்டு     நான் கஷ்டப்பட்டு விட்டதால்
என் ஆசனவாய்            மென்மையாகிவிட்டது. இதனால் மலம்
கழிக்கும்போது ஆசனவாயில்        எனக்குத் தாங்கமுடியாத வலி
இருந்தது. ஆகையால், சாப்பிடுவது என்று    நினைத்தாலே எனக்கு
ஒரே பயமாக இருந்தது.      ஒரு வாரம் முடிவதற்கு முன்னாலேயே
மாதேரானிலிருந்து நான் போய்விட