பக்கம் எண் :

550சத்திய சோதனை

Untitled Document
ஆரம்பக் கட்டங்களில்   எங்களுடைய   புதிய நடவடிக்கை அதிக
வேகமாக நடந்து கொண்டு வந்தது;         இயக்கமும் தீவிரமாகப்
பரவலாயிற்று.

30 அந்த அற்புதக் காட்சி!

     இவ்வாறு ஒரு பக்கம் ரௌலட் கமிட்டி அறிக்கையை எதிர்த்து
நடந்த கிளர்ச்சி வளர்ந்து,     தீவிரமாகிக்கொண்டு வந்த சமயத்தில்,
மற்றொரு பக்கத்தில்    அரசாங்கம், அக் கமிட்டியின் அறிக்கையை
அமுலுக்குக் கொண்டு வருவதில்            மேலும் மேலும் அதிக
உறுதிகொண்டது. ரௌலட் மசோதாவையும் பிரசுரித்தார்கள்.  இந்திய
சட்டசபைக் கூட்டத்திற்கு என் வாழ்நாளில்   ஒரே ஒரு முறை நான்
போயிருக்கிறேன். அது, இந்த மசோதாவின் பேரில் அந்தச் சபையில்
விவாதம் நடந்தபோதுதான். அப்பொழுது சாஸ்திரியார் ஆவேசமாகப்
பேசினார். அரசாங்கத்திற்குப்     பலமான எச்சரிக்கையும் செய்தார்.
வைசிராய்            பிரமித்துப்போய்           அப் பேச்சைக்
கேட்டுக்கொண்டிருந்ததாகத் தோன்றியது. சாஸ்திரியார் தமது சூடான
பேச்சு வன்மையைப் பொழிந்து     கொண்டிருந்த போது வைசிராய்,
கண்கொட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய
பேச்சில் உண்மையும், உணர்ச்சியும் நிறைந்திருந்தன.

     ஒருவர் உண்மையிலேயே    தூங்கிக்கொண்டிருந்தால் அவரை
எழுப்பிவிட முடியும். ஆனால்,         தூங்குவதாகப் பாசாங்குதான்
செய்கிறார் என்றால், அப்படிப்பட்டவரை    என்னதான் முயன்றாலும்
எழுப்பிவிட முடியாது. அரசாங்கத்தின்    உண்மையான நிலைமையும்
அதுதான். அது, முன்னாலேயே இதில்        ஒரு தீர்மானம் செய்து
கொண்டு விட்டது   இதற்குச் சட்டரீதியான சடங்குகளை நிறைவேற்றி
விடவேண்டும் என்பதில் மாத்திரமே  அது கவலை கொண்டு விட்டது.
ஆகையால்             சாஸ்திரியாரின் உண்மையான எச்சரிக்கை
அரசாங்கத்தினிடம் ஒரு மாறுதலையும் உண்டு பண்ணவில்லை.

     இத்தகையதோர் நிலைமையில்     என் பேச்சு வனாந்தரத்தில்
இட்ட           ஓலமாகவே முடியும். வைசிராயை நான் மன்றாடிக்
கேட்டுக்கொண்டேன். அந்தரங்கமாகவும் பகிரங்கமாகவும் அவருக்குக்
கடிதங்கள் எழுதினேன்.             அரசாங்கத்தின் செய்கையால்,
சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளுவதைத்       தவிர எனக்கு வேறு
வழியே இல்லாமல்    போகிறது என்று அக் கடிதங்களில் கூறினேன்.
ஆனால், ஒன்றும் பயன்படவே இல்லை.

     மசோதாக்கள் இன்னும்            சட்டங்களாகக் கெஜட்டில்
பிரசுரமாகவில்லை. நானோ, அதிக பலவீனமான நிலையில் இருந்தேன்.
என்றாலும், சென்னையிலிருந்து எனக்கு அழைப்பு