பக்கம் எண் :

564சத்திய சோதனை

Untitled Document
கருத்துக்       கொண்டிருந்தேன். அதே  அபிப்பிராயமே எனக்கு
இன்றைக்கும் இருந்துவருகிறது.

33 ஒரு ஹிமாலயத் தவறு

     அகமதாபாத் கூட்டம் முடிந்தவுடனே நதியாத்திற்குச் சென்றேன்.
‘ஹிமாலயத் தவறு’ என்ற சொல்லை நான்           முதன் முதலில்
அங்கேதான் உபயோகித்தேன். அச்சொல்         பின்னால் அதிகப்
பிரபலமாயிற்று. அகமதாபாத்தில்கூட,      நான் செய்துவிட்ட தவறை
லேசாக உணர       ஆரம்பித்துவிட்டேன். ஆனால், நதியாத்திற்குச்
சென்று அங்கே இருந்த உண்மையான நிலைமையைப் பார்த்து, கேடா
ஜில்லாவைச்         சேர்ந்தவர்கள்           ஏராளமாகக் கைது
செய்யப்பட்டுவிட்டனர்           என்பதைக் கேள்விப்பட்ட பிறகே,
நான் பெருந்தவறைச் செய்துவிட்டேன் என்பது திடீரென்று  எனக்குப்
பட்டது.          கேடா ஜில்லாவின் மக்களையும் மற்ற இடங்களில்
இருந்தவர்களையும், அதற்கு வேண்டிய      பக்குவத்தை அவர்கள்
அடைவதற்கு முன்னாலேயே             சாத்விகச் சட்டமறுப்பை
ஆரம்பிக்கும்படி   சொல்லிவிட்டது பெருந்தவறு என்று இப்பொழுது
எனக்குத் தோன்றியது.    நான் ஒரு பொதுக் கூட்டத்தில் இவ்விதம்
கூறினேன். இவ்விதம் தவறை நான்    ஒப்புக்கொண்டதைக் குறித்து
நான் பரிகசிக்கப்பட்டது கொஞ்சமல்ல. ஆனால்,  அவ்வாறு தவறை
ஒப்புக்கொண்டதைக் குறித்து       நான் வருத்தப்பட்டதே இல்லை.
ஏனெனில், ஒருவர் தாம்     செய்யும் தவறுகளைப் பூதக் கண்ணாடி
கொண்டு பார்த்து, பிறர் தவறுகள்          விஷயத்தில் அவ்விதம்
பார்க்காமல்       இருந்தால் தான், இரண்டையும் நியாயமாக அவர்
மதிப்பிட முடியும் என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன்.
அதோடு சத்தியாக்கிரகியாக இருக்க விரும்புகிறவர்,  இந்த விதியை
மனப்பூர்வமாகவும் தவறாமலும்   அனுசரித்து வரவேண்டும் என்றும்
நான் நம்புகிறேன்.

     நான் செய்துவிட்ட        ஹிமாலயத் தவறு என்ன என்பதை
இனிக்கவனிப்போம். சாத்விகச் சட்ட மறுப்பைச் செய்வதற்கு  ஒருவர்
தகுதியை அடைவதற்கு முன்னால், அவர் அரசாங்கச் சட்டங்களுக்கு
விரும்பி மரியாதையுடன்     பணிந்து நடந்தவராக இருக்கவேண்டும்.
ஏனெனில், சட்டத்தை மீறி            நடந்து விட்டால் அதற்குரிய
தண்டனையை      அடைய நேருமே என்ற      பயத்தினாலேயே
பெரும்பாலும் அத்தகைய    சட்டங்களுக்குப் பணிந்து நடக்கிறோம்.
அதிலும் ஒழுக்க நெறி சம்பந்தப்படாத  சட்டங்கள் விஷயத்தில் இது
பெரிதும் உண்மையே ஆகும். உதாரணமாக, திருடுவதற்கு   எதிரான
சட்டம் இருந்தாலும்,           இல்லாது போனாலும், யோக்கியமும்
கௌரவமும்        உள்ள ஒருவர், திடீரென்று திருட முற்பட்டுவிட
மாட்டார். ஆனால், இவரே, இருட்டிய பிறகு