பக்கம் எண் :

முடிவில் கண்டுகொண்டேன் 589

Untitled Document
சிலர் இருப்பார்கள்.     அப்படி இருந்தாலும், அப்படிப்பட்டவர்கள்
இன்னாரென்பதைப் பெண்கள் மாத்திரமே    அறிந்திருக்க முடியும்.

     புரோச் கல்வி மகாநாட்டில் தலைமை வகிப்பதற்காக 1917-இல்
என்னுடைய குஜராத்தி நண்பர்கள்    என்னை அங்கே அழைத்துச்
சென்றனர். அங்கேதான்           கங்காபென் மஜ்முதார் என்னும்
அற்புதமான      பெண்மணியைக் கண்டுபிடித்தேன். அவர் விதந்து
என்றாலும் அவருக்கு எல்லையற்ற    ஊக்கமும் முயற்சியும் உண்டு.
படிப்பு என்ற வகையில் பார்த்தால் அவர் அதிகம் படித்தவர் அல்ல.
ஆனால், தீரத்திலும் பொது அறிவிலும் நமது    படித்த பெண்களை
அவர் எளிதில் மிஞ்சிவிடக்   கூடியவர். தீண்டாமைக் கொடுமையை
அவர்         முன்னாலேயே விட்டொழித்திருந்தார். ஒடுக்கப்பட்ட
மக்களிடையே அவர் தாராளமாகப் பழகி,   அவர்களுக்குச் சேவை
செய்து வந்தார்.         அவருக்குச் சொந்தத்தில் சொத்து உண்டு.
அவருடைய தேவைகளோ மிகச் சொற்பம். நல்ல    திடகாத்திரமான
உடல் உள்ளவராகையால் எங்கும்     துணையில்லாமலேயே போய்
வருவார். சர்வ சாதாரணமாகக்  குதிரைச் சவாரி செய்வார். கோத்ரா
மகாநாட்டில் அவரைக் குறித்து             இன்னும் நெருக்கமாக
அறியலானேன்.   ராட்டினம் கிடைக்காததால் எனக்கு ஏற்பட்டிருந்த
துயரை அவரிடம்        முறையிட்டுக் கொண்டேன். ஊக்கத்துடன்
விடாமல் தேடி ராட்டினத்தைக்          கண்டுபிடித்துத் தருவதாக
வாக்களித்து, என் மனத்திலிருந்த பளுவை அவர் குறைத்தார்.

40 முடிவில் கண்டுகொண்டேன்!

     குஜராத் முழுவதிலும் கங்காபென்      தேடியலைந்து விட்டுக்
கடைசியாகப் பரோடா சமஸ்தானத்தில் வீஜாப்பூர்   என்ற இடத்தில்
கைராட்டையை அவர் கண்டுபிடித்தார்.      அங்கே அநேகம் பேர்
தங்கள் வீடுகளில்    கைராட்டைகளை வைத்திருந்தார்கள். ஆனால்,
வெகு காலத்திற்கு முன்னாலேயே,      அவையெல்லாம் ஒன்றுக்கும்
ஆகாதவை என்று       கருதி மரக்கட்டைகளோடு மரக்கட்டையாக
அவைகளைப் பரண்களில் தூக்கிப்   போட்டுவிட்டார்கள். ஒழுங்காக
யாராவது பட்டை போட்ட பஞ்சு    கொண்டுவந்து கொடுத்து, நூற்ற
நூலையும் வாங்கிக்கொள்ளுவதாக இருந்தால்,   தாங்கள் திரும்பவும்
ராட்டையில் நூற்கத்            தயாராக இருப்பதாகவும் அவர்கள்
கங்காபென்னிடம் அறிவித்தனர்.   இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை
கங்காபென் எனக்கு     அனுப்பினார்.   பட்டை போட்ட பஞ்சுக்கு
ஏற்பாடு செய்வது          கஷ்டமாக இருந்தது. இதைக் குறித்துக்
காலஞ்சென்ற உமார் ஸோபானியிடம் கூறினேன். அவர்  தம்முடைய
மில்லிலிருந்து        பட்டை போட்ட பஞ்சைப் போதுமான அளவு
கொடுப்பதாக உடனே கூறி, இக்கஷ்டத்தை நிவர்த்தி செய்துவிட்டார்.
உமார் ஸோபானியிடமிருந்து வந்த பட்டை போட்ட