பக்கம் எண் :

592சத்திய சோதனை

Untitled Document
நண்பர்கள், இச்செலவையெல்லாம்          விருப்பத்தோடு ஏற்றுக்
கொண்டார்கள். இவ்விதம் செலவான பணம்    வீணாகிவிடவில்லை
என்பதே என்னுடைய பணிவான     கருத்து. இதனால் எங்களுக்கு
அதிக அனுபவம் ஏற்பட்டதோடு கைராட்டையின்    சாத்தியங்களும்
எங்களுக்குத் தெரியலாயின.

     நான் கதரை மாத்திரமே     உடுத்த வேண்டும் என்ற பேரவா
அப்பொழுது எனக்குப் பலமாக ஏற்பட்டது.    அப்பொழுது இந்திய
ஆலைகளில் தயாரான    வேட்டியையே கட்டிக் கொண்டிருந்தேன்.
ஆசிரமத்திலும் வீஜாப்பூரிலும்     தயாரான முரட்டுக் கதர்த் துணி,
முப்பது                அங்குல அகலமே இருக்கும். ஆகையால்,
கங்கா பென்னுக்கு ஒரு     முன்னெச்சரிக்கை செய்தேன். ஒரு மாத
காலத்திற்குள் நாற்பத்தைந்து அங்குல அகலத்தில்    எனக்குக் கதர்
வேட்டி தயாரித்துக் கொடுக்காது போனால்,     அகலக் கட்டையாக
இருக்கும் முரட்டுக் கதரையே  கட்டிக்கொள்ளப் போகிறேன் என்று
அவருக்குத் தெரிவித்தேன். இந்த இறுதி      எச்சரிக்கை அவரைத்
திடுக்கிடச் செய்துவிட்டது.    ஆனால், அவரிடம் கேட்டதை அவர்
நிறைவேற்றி விட்டார்.        ஒரு மாதத்திற்குள்ளேயே 45 அங்குல
அகலத்தில்         ஒரு ஜதைக் கதர் வேட்டிகளை அவர் எனக்கு
அனுப்பினார். இதன் மூலம் எனக்கு      ஒரு சங்கடமான நிலைமை
ஏற்பட்டுவிடாமல் அவர் காப்பாற்றிவிட்டார்.

     அதே சமயத்தில் ஸ்ரீ லட்சுமிதாஸ், லாத்தியிலிருந்து ஸ்ரீ ராம்ஜி
என்ற நெசவுக்காரரையும்      அவர் மனைவி கங்கா பென்னையும்
ஆசிரமத்திற்கு அழைத்துவந்து     ஆசிரமத்திலேயே கதர் வேட்டி
நெசவாகும்படி செய்தார்.   கதர் பரவுவதில்         இத்தம்பதிகள்
செய்திருக்கும்           சேவை அற்பமானது அன்று. குஜராத்தில்
மாத்திரமேயல்லாமல் வெளியிலும் கையால்   நூற்ற நூலைக்கொண்டு
நெய்வதற்கு அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கங்கா பென்,
தறியில் நெய்வதைப்         பார்ப்பதே மிகவும் உற்சாகம் ஊட்டும்
காட்சியாகும். எழுதப் படிக்கத் தெரியாத,    ஆனால் ஆற்றல் மிக்க
இச் சகோதரி, கைத்தறியில் வேலை செய்ய     உட்கார்ந்துவிட்டால்,
அவர் மனம் முழுவதும் அதிலேயே ஆழ்ந்துவிடும்.    பிறகு அவர்
மனத்தையும்       கண்களையும் தறியிலிருந்து  வேறு இடத்திற்குத்
திருப்புவதென்பது மிகவும் கஷ்டமான காரியமே.

41 அறிவூட்டிய சம்பாஷணை

     கதர் இயக்கத்தையும் அப்பொழுது   சுதேசி இயக்கம் என்றே
சொல்லி வந்தனர். இந்த இயக்கத்தை   ஆரம்பம் முதற் கொண்டே
ஆலை         முதலாளிகள்    அதிகமாகக் குறை கூறி வந்தனர்.
காலஞ்சென்ற          உமார் ஸோபானியே திறமை மிக்க ஆலை
முதலாளிதான். தமது அறிவையும் அனுபவத்தையும் கொண்டு அவர்
எனக்கு