பக்கம் எண் :

6சத்திய சோதனை

Untitled Document
சிரவணன் கூடையில் வைத்துக் காவடியாகத் தோளில் சுமந்து கொண்டு
போனதைக் காட்டுவது. அப்புத்தகமும்      இப்படமும் என் மனத்தில்
அழியாத முத்திரை     போட்டுவிட்டன. ‘நீ பின்பற்றுவதற்கு இது ஒரு
சரியான உதாரணம்’ என்று எனக்கு நானே    சொல்லிக் கொண்டேன்.
சிரவணன் இறந்ததால்   புத்திர    சோகத்தோடு  பெற்றோர் வருந்திப்
பிரலாபித்தது என் நினைவில் இன்னும் அப்படியே   இருந்து வருகிறது.
சோகம் மிகுந்த அந்தக் கீதம் என் உள்ளத்தை   உருக்கிவிட்டது. என்
தந்தை, எனக்காக வாங்கியிருந்த வாத்தியத்தில்      அந்தக் கீதத்தை
வாசித்தேன்.

     மற்றொரு நாடக சம்பந்தமாகவும்   இதே போன்ற ஒரு சம்பவம்
உண்டு. ஏறக்குறைய அதே சமயத்தில்,ஒரு  நாடகக் குழுவினர் நடத்தி
வந்த   ஒரு நாடகத்தைப் பார்க்க       என் தந்தையாரின் அனுமதி
பெற்றேன். ‘அரிச்சந்திரன்’ என்ற     இந் நாடகம், என் உள்ளத்தைக்
கொள்ளைகொண்டது. எத்தனை தரம் அதைப்  பார்த்தாலும் எனக்குச்
சலிப்பு ஏற்படாது. ஆனால், அதைப்       போய்ப் பார்க்க எத்தனை
தடவைதான் என்னை அனுமதிப்பார்கள்? அது சதா   என் நினைவில்
இருந்து வந்தது. எண்ணற்ற   சமயங்களில்        எனக்குள் நானே
அரிச்சந்திரனாக நடித்திருப்பேன்.‘அரிச்சந்திரனைப் போல எல்லோரும்
ஏன் சத்திய சீலர்கள் ஆகக்கூடாது?’ என்று அல்லும் பகலும் என்னை
நானே கேட்டுக் கொள்ளுவேன். சத்தியத்தைக்     கடைப்பிடிப்பதும்,
அதற்காக       அரிச்சந்திரன்   அனுபவித்த துன்பங்களையெல்லாம்
அனுபவிப்பதுமாகிய  லட்சியமே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது.
அரிச்சந்திரனின் கதை, உண்மையிலேயே நடந்த  ஒன்று என்றே நான்
நம்பிவிட்டேன். அதை    நினைத்துப்  பல    சமயங்களில் அழுதும்
விடுவேன்.அரிச்சந்திரன் சரித்திர புருஷனாக   இருந்திருக்க முடியாது
என்று என்    பகுத்தறிவு   இன்று   எனக்குக் கூறுகிறது.என்றாலும்,
என்னைப் பொறுத்தவரையில் அரிச்சந்திரனும்  சிரவணனும் வாழ்வின்
உண்மைகள். அந்த நாடகங்களைத் திரும்ப  இன்று நான் படித்தாலும்.
முன்போலவே என் மனம் உருகிவிடும் என்பது நிச்சயம்.

3. குழந்தை மணம்

     இந்த   அத்தியாயத்தை  நான் எழுத   நேர்ந்திருக்கக் கூடாது
என்றே விரும்புவேன். இந்த      வரலாற்றைக் கூறி   முடிப்பதற்குள்
கசப்பானவை பலவற்றை      நான்   விழுங்கித்தான் ஆகவேண்டும்
என்பதை அறிவேன். நான்     சத்தியத்தை         வழிபடுபவனாக
இருப்பதென்றால், வேறு விதமாக நடந்து       கொள்ளுவதற்கில்லை.
எனது பதின்மூன்றாவது வயதில் எனக்கு     மணமாயிற்று என்பதைக்
கூறியாக வேண்டியது, வேதனையோடு