பக்கம் எண் :

66சத்திய சோதனை

Untitled Document
ரசாயனத்திற்குப்     பதிலாக வெப்பம்,      வெளிச்சத்தைப் பற்றிப்
படிப்பதென முடிவு செய்தேன். இதைப் படிப்பது சுலபம் என்றார்கள்;
எனக்கும் சுலபமாகவே இருந்தது.

     மற்றொரு சோதனைக்கு நான்        என்னைத் தயார் செய்து
கொண்டதோடு        மேற்கொண்டும்         என் வாழ்க்கையை
எளிமையானதாக்கிக்        கொள்ளவும் முயன்றேன்.  அடக்கமான
என் குடும்ப நிலைமைக்கு ஏற்றதாக  என் வாழ்க்கை முறை இல்லை
என்பதை உணர்ந்தேன்.     பண உதவி வேண்டும் என்று அடிக்கடி
நான் தெரிவிக்கும் போதெல்லாம் என் சகோதரர் பெருந்தன்மையோடு
பணம்           அனுப்பிக்கொண்டே  இருந்தார்.  இப்படிப் பணம்
அனுப்புவதற்காக  அவர்    அனுபவிக்கும்    அநேக கஷ்டங்களை
எண்ணிப்   பார்த்தேன்.  அது மனத்திற்குப்   பெரும் வேதனையாக
இருந்தது.     மாதத்திற்கு எட்டு முதல் பதினைந்து பவுன் வரையில்
செலவு செய்து கொண்டிருந்தவர்களில் அநேக     மாணவர்களுக்கு
உபகாரச் சம்பள வசதி இருந்தது என்பதை அறிந்தேன்.  மிக எளிய
வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த மாணவர்களின் உதாரணமும் என்
முன்னால்   இருந்தது.     என்னைவிட எளிய வாழ்க்கை நடத்திக்
கொண்டிருந்த பல ஏழை மாணவர்களையும் நான்  பார்க்க நேர்ந்தது.
அவர்களில் ஒரு மாணவர், சேரிப் பகுதியில்    வாரத்திற்கு இரண்டு
ஷில்லிங்குக்கு ஓர் அறையை அமர்த்திக் கொண்டு,   அதில் இருந்து
வந்தார். லோகார்ட்டிலிருக்கும்     மலிவான கோக்கோக் கடைகளில்
வேளைக்கு இரண்டு பென்ஸ் செலவில் கோக்கோ குடித்து,  ரொட்டி
தின்று,   தம் சாப்பாட்டை           முடித்து விடுவார். அவரைப்
பின்பற்றுவதென       நினைப்பதே என்னால் முடியாது.  ஆனால்,
இரண்டு  அறைகளை  வைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ஓர்
அறையை அமர்த்திக் கொள்ளலாம்  என்று நினைத்தேன். அப்படிச்
செய்தால் மாதத்திற்கு நான்கிலிருந்து ஐந்து பவுன் மிச்சப்படும்.எளிய
வாழ்க்கை     நடத்துவதைப் பற்றிய    புத்தகங்கள்   சிலவற்றைப்
படித்தேன்.இரண்டு அறை ஜாகையை   விட்டுவிட்டு, ஓர் அறையை
அமர்த்திக்கொண்டேன்.       ஒரு ‘ஸ்டவ்’ அடுப்பும் வாங்கினேன்.
காலை ஆகாரத்தை      வீட்டிலேயே      சமைத்துக்கொள்ளவும்
ஆரம்பித்தேன்.    நான் சமைக்க   வேண்டியிருந்ததெல்லாம் ஓட்ஸ்
கஞ்சி    வைப்பதும்,    கோக்கோவுக்கு      நீர்       கொதிக்க
வைப்பதுமேயாகையால் அதற்கு       இருபது நிமிடங்களுக்கு மேல்
ஆகாது.      மத்தியான ஆகாரத்தை       வெளியில் சாப்பிட்டுக்
கொள்ளுவேன்.  இரவில் வீட்டில்       ரொட்டி தின்று, கோக்கோ
குடிப்பேன். இவ்விதம் தினத்திற்கு ஒரு    ஷில்லிங் மூன்று பென்ஸ்
செலவில் என்னால்    வாழ முடிந்தது.   அது கடுமையாகப் படிக்க
வேண்டியிருந்த சமயமும் கூட எளிய வாழ்க்கையை நான்