பக்கம் எண் :

74சத்திய சோதனை

Untitled Document
கமிட்டியிலிருந்து நான்      ராஜிநாமாச் செய்துவிட்டதாகவே எனக்கு
அரைகுறையாக ஞாபகம் இருக்கிறது.

     நான் இங்கிலாந்தில் இருந்த காலம் முழுவதிலும் எனக்கு இந்தக்
கூச்சம் இருந்து வந்தது. சாதாரணமாக,    நண்பர்களைப் பார்த்துவரச்
செல்லும் இடங்களில்கூட,  அங்கே     ஐந்தாறு பேரோ     அதற்கு
அதிகமானவர்களோ           இருந்துவிட்டால்,  நான் ஊமையாகப்
போய்விடுவேன்.

     ஒருநாள்   ஸ்ரீ மஜ்முதாருடன்    வெண்ட்னருக்குச் சென்றேன்.
அங்கே   சைவ உணவுக்  குடும்பம் ஒன்றுடன் தங்கினோம். ‘உணவு
முறையின் தருமம்’ என்ற நூலின்     ஆசிரியரான ஸ்ரீ ஹோவார்டும்
அதே         கடலோர ஊரில் தங்கியிருந்தார்.   நாங்கள் அவரைச்
சந்தித்தோம். சைவ உணவைப் பரப்புவதற்காக நடந்த ஒரு கூட்டத்தில்
பேசுமாறு அவர் எங்களை அழைத்தார்.    ஒருவர், தாம் கூட்டத்தில்
பேச வேண்டியதை எழுதிப் படிப்பது தவறாகக் கருதப்பட  மாட்டாது
என்பதை      விசாரித்துத்        தெரிந்து கொண்டேன். தாங்கள்
கூறவேண்டியதை,    முன்பின் பொருத்தமாகவும்     சுருக்கமாகவும்
சொல்லுவதற்காகப் பலர்        இவ்விதம் எழுதிப் படிப்பது உண்டு
என்பதையும் நான் அறிவேன்.    நினைவில் இருந்தபடியே பேசுவது
என்பது            என்னால் முடியாத காரியம்.  ஆகையால் நான்
செய்யவேண்டிய பிரசங்கத்தை முதலில் எழுதி வைத்துக்கொண்டேன்.
கூட்டத்தில்         அதைப்   படிப்பதற்கு எழுந்தேன் ; என்னால்
முடியவில்லை.    நான் எழுதி வைத்திருந்த பிரசங்கம் ஒரே தாளில்
முடிந்துவிட்டது. என்றாலும் கண்  மங்கலாகிவிட்டது; உடம்பெல்லாம்
நடுங்கியது.   எனக்காக ஸ்ரீ மஜ்முதார்   அப்பிரசங்கத்தைப் படிக்க
வேண்டியதாயிற்று.      அவர் சொந்தமாகப் பேசியதோ அற்புதமாக
இருந்தது.   கேட்டவர்கள்     கரகோஷம்    செய்து குதூகலமாக
வரவேற்றனர்.   என்னுடைய   திறமையின்மைக்காக        மனம்
வருந்தியதோடு என்னைக்     குறித்து     நானே  வெட்கப்பட்டுக்
கொண்டேன்.

     இங்கிலாந்தில்   பொதுக்கூட்டத்தில் பேச   நான் கடைசியாக
முயன்றது,   அங்கிருந்து  தாய்நாடு திரும்பிய      சமயத்தில்தான்.
இத்தடவையும் நான் என்னைப் பிறரின்  நகைப்புக்கு உரியவனாகச்
செய்துகொள்ளுவதில்தான் வெற்றி பெற்றேன். எனது  சைவ உணவு
நண்பர்களை,   முன்னால் நான் கூறியிருக்கும்        ஹால்பார்ன்
ஹோட்டலுக்கு      ஒரு விருந்துக்கு அழைத்தேன்.  சைவ உணவு
விடுதிகளில்   சைவ உணவு  விருந்து வைக்க முடியும் என்பது சரி.
ஆனால், மாமிசச் சாப்பாடு போடும்   ஹோட்டலிலும் சைவ உணவு
விருந்து ஏன் சாத்தியமாகாது போகும்?    என்று எனக்குள் நானே
சொல்லிக் கொண்டேன்.   அதன் பேரில் ஹால்பார்ன் ஹோட்டலின்
நிர்வாகியிடம் பேசி, சுத்த சைவ உணவு விருந்துக்கு