பக்கம் எண் :

84சத்திய சோதனை

Untitled Document
சொல்லிக்கொள்ள இயலவேண்டும்   என்பதற்காகச் சிரமத்தோடேயே
மற்றப் பகுதிகளையும்     மேலெழுந்தவாரியாகப் படித்து முடித்தேன்.
அதில் எனக்குக்  கொஞ்சமும் சிரத்தை ஏற்படவில்லை; எனக்கு அது
விளங்கவும் இல்லை.    எண்ணாகமம் என்ற பகுதியைப் படிப்பதற்கே
எனக்கு வெறுப்பாக இருந்தது.

     ஆனால், புதிய ஏற்பாட்டைப் படித்தபோது    எனக்கு முற்றும்
மாறான        உணர்ச்சி ஏற்பட்டது.  முக்கியமாக மலைப்பிரசங்கம்
நேரடியாகவே      என்    உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதைக்
கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். ‘தீமைக்குப் பதிலாகத் தீமையைச்
செய்யாதே என்று       உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது
கன்னத்தில் யாராவது    அறைந்தால்     மற்றொரு கன்னத்தையும்
திருப்பிக் காட்டு.     எவனாவது உன்        சட்டையை எடுத்துக்
கொண்டுவிட்டானாயின் உன் போர்வையையும்   அவனுக்குக் கொடு’
என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை
அளித்தன.  ‘ உண்ணும் நீர் தந்த       ஒருவனுக்குக் கைம்மாறாய்,
விண்ணமுதத்தைப் போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய்’ என்ற
ஷாமல்பட்டின் பாடல் உடனே என்     நினைவுக்கு வந்தது. ‘கீதை’,
‘ஆகிய ஜோதி’, ‘மலைப்பிரசங்கம்’ ஆகிய மூன்றும்   ஒன்றே என்று
கருத என் இளம் மனம் முயன்றது. துறவே, சமயத்தின்   தலைசிறந்த
அம்சம் என்பது என் மனத்தை மிகவும் கவர்ந்தது.

     இவைகளைப்   படித்ததனால்   மற்றச்    சமயாசாரியர்களின்
வாழ்க்கை வரலாறுகளையும்    படிக்கவேண்டும் என்ற பசி எனக்கு
உண்டாகிவிட்டது. கார்லைல் எழுதிய,   வீரர்களும் வீரர் வழிபாடும்’
என்ற       நூலைப் படிக்குமாறு ஒரு நண்பர் கூறினார்.  வீரனைத்
தீர்க்கதரிசியாகக் கூறும் அத்தியாயத்தைப் படித்து,   முகமது நபியின்
பெருமையையும் வீரத்தையும்       எளிய வாழ்க்கையையும் பற்றித்
தெரிந்துகொண்டேன்.

     பரீட்சைக்குப்    படிக்க      வேண்டியிருந்தது. மற்ற வெளி
விஷயங்களைக் குறித்துப்      படிக்க நேரம் கிடைப்பதே இல்லை.
ஆகையால்,      சமயங்களைப் பற்றி இன்னும்    அதிகமாக நான்
தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சமய நூல்களை  இன்னும்
அதிகமாகப்       படிக்கவேண்டும்,   முக்கியமான   மதங்களைப்
பற்றியெல்லாம்    நன்கு   தெரிந்துகொள்ள வேண்டும் என்று என்
மனத்திற்குள் முடிவு செய்து கொண்டேன்.

     நாத்திக வாதத்தைக் குறித்தும்    நான் ஒரு சிறிதும் தெரிந்து
கொள்ளாமல் இருப்பது எப்படி? பிராட்லாவின் பெயரையும் நாத்திகம்
என்று கூறப்படும்    அவர்  வாதத்தையும்   ஒவ்வோர் இந்தியரும்
அறிவர். அதைக் குறித்து ஏதோ      ஒரு புத்தகத்தைப் படித்தேன்.
அதன் பெயரை மறந்துவிட்டேன்.         அதற்கும் முன்னாலேயே
நாத்திகம் என்ற பாலைவனத்தைக் கடந்து