பக்கம் எண் :

102தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

9. சிதம்பரம்

சிதம்பரம் என்று கூறியவுடன் நமது நினைவிற்கு
வருவது இந்நகரிலுள்ள நடராசப் பெருமானின் கோவிலாகும்,
(கோவில் என்றாலே சிதம்பரத்தைக் குறிக்கும் என்பர்.) இந்து
சமயத்தில் சைவ நெறியைப் பின்பற்றும் மக்களின் முக்கியத்
தெய்வம் சிவபெருமான் ஆவார். சிவபெருமானை லிங்க
வடிவில்
வழிபடுவது மரபாக உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள
சிவத்தலங்களிலேயே முதன்மை பெற்றது சிதம்பரம் நடராசர்
கோவிலாகும். தஞ்சைச் சோழ மன்னர்கள் இக்கோவிலிலுள்ள
இறைவனைத் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கினர்.
சிதம்பரம் கோவில் ‘தில்லைக் கோவில்’ என அழைக்கப்படுகிறது.
சைவத் திருமுறைகள், திருப்புகழ், இராமலிங்க அடிகளின்
அருட்பாக்கள் ஆகியவை தில்லைக் கோவிலின் பெருமையைக்
கூறுகின்றன.

தில்லைக் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும்.
கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்கும் 16ஆம் நூற்றாண்டிற்கும்
இடையில் இக்கோவிலின் கட்டடப்பகுதிகள் வளர்ச்சியடைந்து
இன்றைய உருவத்ததைக் கோவில் பெற்றுள்ளது.

மன்னர்களின் திருப்பணிகள்

தஞ்சைச் சோழர்கள் பரம்பரை பரம்பரையாகத்
தில்லைக் கோவிலுக்குத் திருப்பணியாற்றியுள்ளனர். சிற்றம்பலம்
எனப்படும் சித் சபை இக்கோவிலின் ஆதி அமைப்பாகும்.
சிற்றம்பலம் ‘சிதம்பர இரகசியத்தைக்’ கொண்டுள்ளது. சிதம்பரை
இரகசியம் இறைவன் அருவமாக இருப்பதை எடுத்தியம்புகிறது.
இச்சபை மரத்தாலாகியது.