பக்கம் எண் :

138தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

வெளிப் பிரகாரத்தின் தென்பகுதியில் இறைவன் சந்நிதிக்கு
அருகில் இந்தியத் தொல்பொருள் துறையினரின் காட்சிக் கூடம்
உள்ளது. தஞ்சைப் பெருங்கோவிலைப்பற்றியக் கருத்துகளை
எளிய முறையில் பல நவீன சாதனங்கள்மூலம் இக்காட்சிக்
கூடம் எடுத்துரைக்கின்றது.

பெருங்கோவிலுக்கு அருகில், சாலையின் ஓரத்தில்
தி.மு.க. அரசின் ஆட்சிக் காலத்தில், (1972ஆம் ஆண்டு)
அமைத்த இராஜராஜனின் சிலை உள்ளது. 1980ஆம் வருடம்
இக்கோவிலின் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

நமது பண்பாட்டின் பெருமைக்குரிய தஞ்சைப்
பெருங்கோவிலைப்பற்றித் தெரியாமலும், இக்கோவிலைக்
காணாமலும் இருப்பார் உளரோ?

தஞ்சை நகரிலுள்ள இதர கோவில்கள்

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு
உட்பட்டு 88 கோவில்கள் உள்ளன, இவை தஞ்சை நகரிலும்,
தஞ்சைக்கு அருகிலும் உள்ளன. இக்கோவில்களில்
தலைமையானது, பிரகதீஸ்வரர் கோவில் ஆகும்.
தஞ்சை நகரிலுள்ள இதர முக்கியக் கோவில்கள்
பின்வருவன ஆகும் : சங்கர நாராயணர் கோவில்,
கொங்கணேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாத சுவாமி
கோவில், வசிஷ்டேஸ்வரர் கோவில், நவநீத கிருஷ்ணன் கோவில்,
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், இராஜகோபால்
சுவாமி கோவில், கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில்,
நீலமேகப் பெருமாள் கோவில், மேல சிங்கப்பெருமாள் கோவில்
முதலியன. இவற்றுள் பல தஞ்சை நாயக்க மன்னர்களின்
காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவையாகும். புன்னைநல்லூர்
மாரியம்மன் கோவிலும், கோதண்டராமசுவாமி கோவிலும்
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு
உட்பட்டுள்ளது. தஞ்சை நகரின் மேல வீதியில் கோவில்கள் மிக
அதிகமாக இருப்பது சிறப்பான ஒரு அம்சமாகும். காமாக்ஷியம்மன்
கோவில் மேல வீதியிலுள்ள ஒரு முக்கியக் கோவிலாகும்.

அரண்மனைக் கட்டட அம்சங்களான வளைவுகள்
உயர மற்ற, பெரிய தூண்கள் ஆகியவை தஞ்சை நகர்
அரண்மனைக்