பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்149

தஞ்சை கோவில் விமானத்தைப்போல் இக்கோவிலின் விமான
நிழல் பூமியில் விழாதபடி கட்டப்பட்டுள்ளது. விமானத்தின்
அடிமுதல் ஸ்தூபிவரை உள்ள சிற்பங்கள் தேன்னிந்தியாவில்
உள்ள யாவற்றிலும் வனப்பும் சிறப்பும் பொருந்தியவையாகக்
கருதப்படுகின்றன. விமானத்தின் பிரம ரந்திரத் தளக்கல்
தஞ்சைக் கோவிலைப்போல் ஒரே கல்லாலானது. இவ்வூருக்கு
அருகிலுள்ள பரணம் என்ற கிராமத்திலிருந்து சாரம் அமைத்து
இக்கல்லை விமானத்தின் சிகரத்தில் ஏற்றினார்களாம்!

5. விமானத்தின் சுவர்களிலுள்ள தேவ கோட்டங்களில்
உயிர்ச்சிற்பங்களாகக் காட்சியளிக்கும் பல தெய்வங்களின்
சிற்பங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் நர்த்தன விநாயகர்,
அர்த்தநாரீஸ்வரர், தஷிணாமூர்த்தி, ஹரிகரன்,
நடராசர்
ஆகிய திருவுருவங்கள் உள்ளன. மேற்குச் சுவரில்
கங்காதரர், லிங்கோத்பவர், உபய தேவிகளுடன் கூடிய
திருமால், தேவேந்திரன், உமாமகேஸ்வரர்
ஆகிய
திருவுருவங்கள் உள்ளன. வடக்குச் சுவரில் காலசம்காரர்,
விஷ்ணு, துர்கை, பிரமன், பைரவர், காமதகனமூர்த்தி ஆகிய
திருவுருவங்கள் உள்ளன. கிழக்குச் சுவர்களில் சண்டேச
அனுக்கிரக மூர்த்தி, ஞான சரஸ்வதி, பிக்ஷாடனர்,
கஜலட்சுமி
ஆகிய திருவுருவங்கள் உள்ளன. இச்சிற்பங்கள்
யாவும் சோழர்காலச் சிற்பிகளின் உன்னதப் படைப்புகள் ஆகும்.
இவை பார்ப்போர் யாவரையும் மெய்மறக்கச செய்கின்றன. இவை
இந்து சமய வரலாற்றினையும் சிறந்த கலை நுணுக்கத்தையும்
கொண்டுள்ளன. சண்டேச அனுக்கிரக மூர்த்தியின் சிற்பம்
அதிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இச்சிற்பமும் இதர
சில சிற்பங்களும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர்
பணியினால் புதியனபோல் காட்சியளிக்கின்றன.

6. துவார பாலர்கள் இக்கோவிலின் மற்றொரு சிறப்புமிக்க
அம்சம் ஆகும். கிழக்கு, தெற்கு, வடக்கு வாயில்களிலும்,
கோயிலுள்ளும் 10 துவார பாலர்கள் சிற்பங்கள் உள்ளன.
இவை சுமார் 4 மீட்டர் உயரத்தில் ஒரே கல்லினால்
ஆனவை. இத்துவாரபாலர் சிலைகள் கோவிலில் கம்பீரமாகத்
தோற்றமளிக்கின்றன.