பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்157

சேஷராயர் மண்டபத்திற்கு எதிரில் ஆயிரங்கால் மண்டபம்
உள்ளது. (இங்கு தற்பொழுது 953 கற்றூண்கள் உள்ளன.)
இம்மண்டபத்தின் நடுவில் தேர் வடிவமாய் அமைந்துள்ள
ஒரு சிறிய மண்டபம் உள்ளது. இது திருமாமணி மண்டபம்
எனப்படுகிறது. இம்மண்டபத்தின் இரு பக்கங்களிலும் காணப்படும்
கல் சக்கரங்கள், குதிரைகள் ஆகியவை சிற்பக்கலைச்
சிறப்புமிக்கன. ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு மூலையில்,
படிக்கட்டுகளையடுத்து இரு பெரிய கல் யானைகளின்
உருவங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

இக்கோவிலிலுள்ள கருட மண்டபம் ஒரு வியத்தகு
படைப்பு ஆகும். கருட மண்டபத்தில் கருடாழ்வார் சந்நிதி
உள்ளது. கருடாழ்வாரின் செப்புச் சிலை மிகமிக உயரமானதாகும்.
இதுபோல் வேறு எங்கும் இல்லை என்று கூறலாம். கருடாழ்வார்
சந்நிதிச் சுவர்களின் சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை.
இம்மண்டத்தில் 212 தூண்கள் உள்ளன. மண்டபத்தின்
நடுப்பகுதியிலுள்ள கல்தூண்களில், கூப்பிய கைகளுடன்
நிற்கும் நாயக்க வள்ளல்களின் உருவங்கள் உள்ளன.

5. இக்கோவிலில் வடிக்கப்பட்டுள்ள யாளிகள் அழகிய
வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன.

6. நான்காம் திருவீதியில் கோவில் நிர்வாகத்தினர்
ஒரு சிறு காட்சிக்கூடத்தை அமைத்துள்ளனர், இது அரங்கர்
கலைக்கூடம்
எனப்படுகிறது. இது 1968இல் நிறுவப்பட்டது.
வரலாறு கூறும் செப்பேடுகள், பழைய நாணயங்கள், பல
தெய்வங்களின் வெண்கலத்திருவுருவங்கள், தந்தச் சிற்பங்கள்,
பழைய காலப் பூட்டுகள், படைக்கருவிகள் இன்னும் சில அரிய
பொருள்கள் இக்காட்சிக் கூடத்தில் உள்ளன.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில் நமது பண்பாட்டின்
பெருமையைக் கூறும் ஒரு சிறந்த சின்னம் ஆகும்.

திருவானைக்கா : திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும்
வழியில் திருவானைக்கா உள்ளது. இது ஸ்ரீரங்கம்
நகராட்சிக்குட்பட்ட பகுதியாகும். திரவானைக்காவில்
ஜம்புகேஸ்வரர்
கோவில் உள்ளது. இது ஒரு புகழ்மிக்க
சிவ வழிபாட்டுத் தலம் ஆகும்.