பக்கம் எண் :

160தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

17. திருச்சி

திருச்சி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நகரமாகும்.
நெடுங்கிள்ளி, கரிகாலன், கோப்பெருஞ்சோழன் முதலிய சங்க
காலச் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய உறையூர்
இன்றைய திருச்சி நகரின் ஒரு பகுதியாகும். சங்க காலத்தில்
உறையூர் ‘கோழியூர்’ என அழைக்கப்பட்டது. சங்க காலத்தில்
இது தலைசிறந்த வாணிகத்தலமாக விளங்கியது. இங்கு
நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் இவ்வூரின் தொன்மையையும்
பண்பாட்டுப் பெருமையையும் விளக்குகின்றன. அகழ்வாராய்ச்சி
மூலம் உறையூர், உரோமாபுரியுடன் கொண்டிருந்த வாணிப
உறவு தெரிய வருகிறது. உரோமர்களது சாயத்தொட்டி, பானை
வகைகள்
ஆகியவை இங்கு நடத்திய ஆய்வுகளில்
கிடைத்துள்ளன. அக்காலத்தில் ஆடை நெய்தல், அவற்றுக்குச்
சாயம் பூசுதல் போன்ற தொழில்களுக்குப் பெயர் பெற்ற நகரமாக
உறையூர் விளங்கியிருக்க வேண்டும் என்று அகழ்வாராய்ச்சிகள்
தெரிவிக்கின்றன. கி.பி. சுமார் 10ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட
ஒரு பெரிய வெள்ளத்தினால் இந்நகர் அழிந்திருக்கலாம்
என்று கருதப்படுகிறது. சங்க காலத்தில் சிறந்த வாணிகத்
தலமாக விளங்கிய உறையூர் இந்நாளிலும் கைத்தறிச்
சேலைகளுக்குப் பெயர் பெற்று விளங்குகிறது.

களப்பிரர்கள் வருகையினால் சங்க காலச் சோழ மன்னர்கள்
ஆட்சி முடிவுற்றது. பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன்
(கி.பி. 600-630) ஆட்சிக் காலத்தில் திருச்சி பல்லவ அரசின்
தெற்கு எல்லையாக இருந்தது. மகேந்திரவர்மன் திருச்சி
மலையைக் குடைந்து உண்டாக்கிய குகைக் கோவிலை மலையின்
உயரே இன்றும் காணலாம். கி.பி.650 முதல் 860 வரை பல்லவப்
பேரரசுக்கு உட்பட்டு முத்தரையர்கள் என்பவர்கள் திருச்சி,
தஞ்சாவூர், புதுக்கோட்டைப் பகுதிகளை ஆட்சி புரிந்தனர்.
இவர்கள் செந்தலை என்ற இடத்தைத் தலைநகராகக்கொண்டு
ஆட்சி புரிந்தனர். சாத்தன் மாறன், குவாவன் மாறன், குவாவஞ்
சாத்தன், சுவரன் மாறன், சாத்தம்