பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்163

திருச்சிக் கோட்டையின் எஞ்சிய பகுதி

திருச்சிக் கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மதுரை நாயக்க அரசைத் தோற்றுவித்த விஸ்வநாதர், திருச்சி
நகரின் பாதுகாப்பிற்காகக் கோட்டை, கொத்தளங்களைக் கட்டினார்.
மதுரை நாயக்க மன்னர் முத்துவீரப்பர் தமது தலைநகரைத்
திருச்சிக்கு மாற்றியபொழுது(1616) திருச்சிக் கோட்டை மேலும்
பலப்படுத்தப்பட்டிருக்கலாம். சொக்கநாதர் ஆட்சியின் தொடக்க
காலத்தில் (1659-1682) லிங்கம நாயக்கர் செஞ்சியின் ஷாஜி
உதவியுடன் திருச்சிக் கோட்டையை முற்றுகையிட்டார்.
ஆனால், சொக்கநாதர் இம்முற்றுகையிலிருந்து திருச்சியை
விடுவித்தார். கி.பி.1665 இல் சொக்கநாதர் மதுரையிலிருந்து
திருச்சிக்குத் தமது தலைநகரை மாற்றினார். கி.பி.1680இல்
திருச்சிக்கோட்டை மைசூர்ப் படைகளால் முற்றுகையிடப்பட்டது.
குமரய்யா
என்பவர் மைசூர்ப் படைகளின் தளபதியாக இருந்தார்.
சொக்கநாதர், இராமநாதபுர சேதுபதி, மராட்டியர் ஆகியோர்
உதவியுடன் மைசூர்ப் படைகளைத் திருச்சியிலிருந்து
முரியடித்தார். கி.பி. 1665 முதல் 1736 முடிய திருச்சியே
மதுரை நாயக்க அரசின் தலைநகராக இருந்தது. அரசி
மீனாட்சியைப் பதவியிலிருந்து நீக்க விரும்பி பங்காரு
நாயக்கர்
கி.பி. 1733இல் திருச்சியைத் தாக்கினார்.
ஆனால், அரசி மீனாட்சியின் படைகள் திருச்சியைப்
பகைவர் தாக்குதலிலிருந்து காத்தன. பங்காரு மறுபடியும்
திருச்சிக் கோட்டையைத் தாக்கிய பொழுது தென்னாட்டில்
படையெடுத்திருந்த ஆர்க்காட்டின் தளபதி சந்தா
சாகிப்பின் உதவியை அரசி மீனாட்சி பெற்றார். ஆனால்,
சந்தா சாகிப் அரசி மீனாட்சிக்கு நம்பிக்கைத் துரோகம்
செய்து, மீனாட்சியைக் காவலில் வைத்துவிட்டுத் திருச்சிக்
கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றினார் (1736).
கி.பி. 1741இல் மராட்டியர்கள் திருச்சிக் கோட்டையை
முற்றுகையிட்டு வென்றனர். ஆனால், கி.பி. 1743இல்
ஹைதராபாத் நிஜாம் அசப்ஷா திருச்சிக் கோட்டையை
முற்றுகையிட்டு, மராட்டியரிடமிருந்து அதனைக் கைப்பற்றினார்.
ஆர்க்காட்டு நவாப் அன்வாருதீன் திருச்சிக் கோட்டையைப்
புதுப்பித்துக் கட்டினார். அன்வாருதீன் இறந்தபின் ஆர்க்காட்டு
நவாபின் பதவிக்கு, அன்வாருதீனின் மகன்