பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்231

தலைமையிடமாக மதுரை நகர் விளங்கிற்று. கி.பி. 1866இல்
மதுரை ஒரு நகராட்சி ஆயிற்று.

இந்தியச் சுதந்தரப் போராட்ட காலத்தில் தீவிர
கள்ளுக்கடை மறியல்கள், துணிக்கடைமறியல்கள், பெருமாள்
தெப்பக்குள மண்டபத்திலும், மீனாட்சியம்மன் கோவில்
கோபுரங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுதல், அரிசன மக்கள்
சேவை, ஆலயப் பிரவேசம் (1939), கதர் இயக்கம், பாரதியின்
தேசியப் பாடல்களை பாத யாத்திரையாகச் சென்று பாடுதல்,
நாடகங்கள் நடித்தல் முதலிய பல செயல்களில் ஈடுபட்டு, மதுரை
நகர் இந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாற்றில் முக்கிய
இடத்தைப் பெற்றுள்ளது.

1971 முதல் மதுரை ஒரு மாநகராட்சி ஆயிற்று.
திரு. S. முத்து மதுரை மாநகராட்சியின் முதல் மேயரானார்.
1974இல் மதுரை நகரையடுத்த பல பகுதிகள் மாநகராட்சியுடன்
இணைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த பெரிய
நகராக மதுரை விளங்குகிறது. 1981ஆம் ஆண்டு ஜனவரி (4-10)யில்
மதுரை நகரில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்கு அ.இ.அண்ணா
தி.மு.க. அரசு அதிக முயற்சிகள் எடுத்தது. ஐந்தாம் உலகத்
தமிழ் மாநாடு நடைபெற்றது மதுரை நகரின் வரலாற்றில்
புகழ்மிக்க ஒரு நிகழ்ச்சியாகும்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான
பண்பாட்டு வரலாற்றைக் கொண்ட மதுரை நகரின்
பெருமைக்குரிய அம்சங்களைப் பின்வரும் பகுதியில்
காணலாம்.

மீனாட்சி - சுந்தரேசுவரர் கோவில்

இன்றைய மதுரை நகரின் புகழுக்கு முக்கிய காரணமாக
இருப்பது மீனாட்சி - சுந்தரேசுவரர் கோவிலாகும். இது புகழ்
பெற்ற சிவ வழிபாட்டுத் தலமாகும். மீனாட்சி கோவிலில்
காட்சி தரும் அம்மன் பார்வதி தேவியின் அவதாரமாக மதுரை
மன்னனான மலையத்துவஜ பாண்டியனுக்குப் பிறந்தார் என்றும்,
தமது ‘திக் விஜயத்தின்’ பொழுது மீனாட்சி கைலாயம்வரை
வெற்றிப் பெற்றுச் சென்றார் என்றும், கைலாயத்தில் அவர்