பக்கம் எண் :

264தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

24. புதுக்கோட்டை

இன்றைய புதுக்கோட்டைப்பகுதி பண்டைக் காலத்தில்
சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் இருந்தது.
இப்பகுதி பின்னர் முத்தரையர்கள், தஞ்சைச் சோழர்கள்,
பிற்காலப் பாண்டியர்கள், நாயக்கர்கள் ஆகியோர் ஆட்சியின்
கீழ் வந்தது. தொண்டைமான்கள் என்பவர்கள் தொண்டை
மண்டலத்திலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் குடியேறினர்
எனப்படுகிறது. இவர்கள் யானை பிடிப்பதில் வல்லவர்களாக
இருந்தனர். இராமநாதபுரத்தில் ஆட்சிபுரிந்த இரகுநாத சேதுபதி
என்ற கிழவன் சேதுபதி, இரகுநாதராயத் தொண்டைமானின்

தங்கையை மணந்துகொண்டு, தொண்டைமானைப் புதுக்கோட்டைப்
பகுதியில் சுதந்தரமாக ஆட்சி செய்யுமாறு செய்தார். இரகுநாதராயத்
தொண்டைமானின் வழிவந்தவர்கள் கி.பி.1948வரை
புதுக்கோட்டையை ஆட்சிபுரிந்தனர்.

புதுக்கோட்டை நகரின் பண்டைய பகுதிகள் கலச மங்கலம்,
சிங்கமங்கலம்
ஆகும். மன்னர் இரகுநாதராயத்
தொண்டைமானால்
இங்கு ஓர் அரண்மனை கட்டப்பட்டு இவ்
விடத்திற்குப் ‘புதுக்கோட்டை’ என்ற பெயர் வழங்கப்பட்டது.
இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து
விஜயரகுநாதத் தொண்டைமான் (1730-1769). இராய ரகுநாதத்
தொண்டைமான்
(1769-1789), விஜயரகுநாதத் தொண்டைமான்
(1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர்.

கி.பி. 18ஆம் நூற்றாண்டில் திருச்சியைச் சந்தா சாகிப்பும்,
பிரெஞ்சுக்காரர்களும் முற்றுகையிட்ட பொழுதும் ஆங்கிலேயர்கள்
ஹைதர் அலியுடன் போர்புரிந்தபொழுதும் புதுக்கோட்டை
மன்னர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உதவியாக இருந்தார்.
பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு (1799), அங்கிருந்து
தப்பிவந்த வீரபாண்டிய கட்ட பொம்மனைப் பிடித்து
ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் புதுக்கோட்டை மன்னர்
விஜயரகுநாதத் தொண்டைமானின்
படைகள் உதவின.
இம்மன்னரை அடுத்து பதவிக்கு வந்த இவரது மகன்