பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்295

27. இராமநாதபுரம்

இன்றைய இராமநாதபுர நகர் பாண்டிய நாட்டின் ஒரு
பகுதியாகும். மதுரை நாயக்க மன்னர் முத்து கிருஷ்ணப்பர்
(1601-1609) சடைய்க்கத் தேவர் என்ற உடையான் சேதுபதியை
த்
தம் பிரதிநிதியாக நியமித்து, மறவர்கள் என்னும் மக்கள் மிகுதியாக
வாழும் இராமநாதபுரப் பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பைக்
கொடுத்தார் (1605). சடைய்க்கத் தேவர் இன்றைய இராமநாதபுர
நகருக்கு அருகிலுள்ள (இராமநாதபுரத்திலிருந்து 16 கி.மீ.)
போகளூரைத்
தலைநகராகக்கொண்டு சேதுபதி மன்னர்கள்
ஆட்சியை ஏற்படுத்தினார்.

‘சேது’ என்றால் பாலம் எனப் பொருள்படும். ஸ்ரீராமர்
இலங்கைக்குச் செல்வதற்காக அமைத்த பாலத்தின்
பாதுகாவலராக, ஸ்ரீராமரால் நியமிக்கப்பட்டவர்களாகக்
கருதப்படுபவர்கள் ‘சேதுபதிகள்’ (சேது=பாலம், பதி=தலைவன்)
என அழைக்கப்பட்டனர்.

சடைய்க்கத் தேவர் இராமேஸ்வரம் செல்லும் புனிதப்
பயணிகளுக்குச் சாலைகளில் பாதுகாப்பைக் கொடுத்தார்.
கி.பி. 1605முதல் 1622வரை இவர் ஆட்சி புரிந்தார். இவருக்குப்
பின் இவர் மூத்த மகன் கூத்தன் சேதுபதி ஆட்சிக்கு வந்தார்
(1622-1636). இவரையடுத்து இரண்டாம் சடைய்க்கத் தேவர்
(தளவாய் சேதுபதி) பதவியேற்றார் (1636-1645). இவர் காலத்தில்
திருமலை மன்னரின் படைகள் இராமப்பய்யன் என்ற தளபதியின்
தலைமையில் மறவர் நாட்டில் படையெடுத்து சடைய்க்கத் தேவரை
வென்று (கி.பி. 1637) அவரைச் சிறைப் பிடித்தன. ஆனால்,
விரைவில் அவர் விடுதலை செய்யப்பட்டு மீண்டும்
பதவியிலமர்த்தப்பட்டார். இரகுநாத சேதுபதி (1645-1670) என்ற
‘திருமலை சேதுபதி’ திருமலை மன்னரின் நண்பராக விளங்கினார்.
மைசூர் மன்னர் கந்தீரவன் மதுரைமீது