பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்299

ஆலயம்’ உள்ளது. மாளிகையைச் சுற்றி எஞ்சிய கோட்டைப்
பகுதிகள் உள்ளன. மாளிகையின் ஒரு பகுதியில் அரசு
அலுவலகங்கள் சில செயல்படுகின்றன.

இராமநாதபுர நகரில்தான் தாயுமான சுவாமி அடிகள்
இயற்கை எய்தினார். இங்கு அவர் அடங்கிய இடம் உள்ளது.

இராமநாதபுர நகரில் கிறிஸ்து ஆலயம், புனித தாமஸ்
ஆலயம்
என இரு முக்கிய கிறித்தவ ஆலயங்கள் உள்ளன.
மார்டின் என்ற இராணுவ அதிகாரியால் கிறிஸ்து ஆலயம்
கட்டப்பட்டது. புனித தாமஸ் ஆலயம், கட்டட, ஓவியக்
கலை சிறப்புமிக்கதாகும்.

திருப்புல்லாணி

இராமநாதபுரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில்
திருப்புல்லாணி என்ற இடம் உள்ளது. திருப்புல்லாணியில்
ஆதி ஜெகநாத சுவாமி கோவில் உள்ளது. இது ஒரு புகழ்பெற்ற
வைணவ வழிபாட்டுத்தலம். இந்துக்களின் புனித யாத்திரைத்
தலமும் ஆகும்.

இலங்கைக்கு இராவணனுடன் போர்புரியச் செல்லுமுன்
ஸ்ரீராமர்
இங்குத் திருப்புல் படுகையில் (தர்ப்பசயனம்) 7 நாள்
இருந்தார் என்றும், இங்குள்ள இறைவனை வணங்கி ‘கோதண்டம்’
என்ற தெய்விக வில்லைப் பெற்றார் என்றும் கூறுவர்.
இராவணனை வென்று ஸ்ரீராமர் சீதையுடன் வெற்றிகரமாகத்
திரும்பியபின் திருப்புல்லாணிக்கு வந்து, ஆதி ஜெகநாதரை
ஸ்ரீராமர் வணங்கினார் என்றும் கூறப்படுகிறது. இராமேஸ்வரத்திற்குப்
புனித யாத்திரை வருபவர்கள், திருப்புல்லாணியிலிருந்து
4 கி.மீ. தொலைவிலுள்ள ஆதிசேதுவில் நீராடித்
திருப்புல்லாணியிலுள்ள ஆதி ஜெகநாதரை வழிபட்டு,
தங்கள் புனித யாத்திரையை முடிப்பர்.

இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இராமநாதபுர
சேதுபதிகள் இக்கோவிலில் விரிவாகத் திருப்பணியாற்றியுள்ளனர்.
சேதுபதி மன்னர்களின் உருவச்சிலைகள் சில இக்கோவிலில்
உள்ளன.