பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்313

29. சிவகாசி

இராமநாதபுர மாவட்டத்திலுள்ள ஒரு முக்கிய நகரம்
சிவகாசி ஆகும். தென்காசியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி
புரிந்த பராக்கிரம பாண்டியன் (1422-1463) சிறந்த
சிவபக்தனாக விளங்கினார். இவர் தமது தலைநகரில் ஒரு
பெரிய சிவன் கோவிலைக் கட்டி, அதற்குப் பிரதிஷ்டை செய்ய
ஒரு லிங்கத்தைக் காசியிலிருந்து கொண்டு வந்தார் என்றும்,
லிங்கத்தைச் சுமந்துகொண்டு வந்த பசு இன்றைய சிவகாசிப்
பகுதியிலுள்ள வில்வ வனத்திலிருந்து செல்லாமல் அமர்ந்து
விட்டதாகவும், தென்காசிக் கோவிலில் லிங்கத்தைப் பிரதிஷ்டை
செய்ய வேண்டிய நாள் வந்துவிட்டதால், காசியிலிருந்து
கொண்டுவந்த லிங்கம் சிவகாசியிலே பிரதிஷ்டை செய்யப்பட்டது
(கி.பி. 1445) என்றும், பின் மன்னன் மற்றொரு லிங்கத்தைக்
காசியிலிருந்து கொண்டுவந்து தென்காசிக் கோவிலில் பிரதிஷ்டை
செய்தார் என்றும் கூறப்படுகிறது.

சிவகாசிக் கோவிலிலுள்ள சிவன் விஸ்வநாத சுவாமி என
அழைக்கப்படுகிறார். அம்மன் விசாலாட்சி எனப்படுகிறார்.
திருமலை மன்னர் காலத்தில் (1623-1659) இக்கோவிலின் உற்சவ
மூர்த்திகள் சில வழிபாட்டிற்கு வைக்கப்பட்டன என்றும்,
திருமலை மன்னரும் அவர் மகளும் சிவகாசியில் சில நாள்கள்
தங்கி, சிவனை வழிபட்டனர் என்றும் கூறப்படுகிறது.

இந்நகரிலுள்ள ‘நாயக்கர் தெப்பம்’ மதுரை நாயக்க
அரசைத் தோற்றுவித்த விஸ்வநாதர் (1529-1564) ஆட்சிக்
காலத்தில் அமைக்கப்பட்டது எனப்படுகிறது.

மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில்
சிவகாசி ஒரு ஆளுநரின் ஆட்சியிடமாக இருந்தது. திருமலைமன்னர்
இறந்த பின் (1659) அவர் சகோதரர் குமார முத்து வீரப்பர்,
சிவகாசியில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சிவகாசி நகரின் தென்பகுதியில் ஏழுகோவில் என்ற
குலக்கோவில் உள்ளது. இங்கு சுமார் 300 ஆண்டுகளுக்கும்