பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்319

வடபத்ரசாயி கோயிலிலுள்ள கருடாழ்வார் மண்டப
மரச்சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை.

ஆண்டாள் கோவில்

வடபத்ரசாயி கோவிலுக்குச் சிறிது வடக்கில் ஆண்டாள்
கோவில் உள்ளது. நாச்சியார் கோவில் எனவும் இது
அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் பெருமாள் ரெங்கமன்னார்
ஆவார். ஆண்டாள் சூடிக்கொடுத்த நாச்சியார் எனப்படுகிறார்.
கி.பி. 15ஆம் நூற்றாண்டில் மாவெலி வாணாதிராயர் என்பவர
இக்கோவிலைப் புதுப்பித்தும், விரிவுபடுத்தியும் திருப்பணிகள்
புரிந்தார் என்று அறியப்படுகிறது. மதுரைப் பாண்டிய
மன்னர்களின் திருப்பணிகளையும், திருமலை மன்னர்
முதலிய மதுரை நாயக்க மன்னர் திருப்பணிகளையும்
இக்கோவில் கொண்டுள்ளது. ஆண்டாள் பிறந்ததாகக் கூறப்படும்
ஆடி மாதத்தில் இக்கோவிலில் முக்கிய விழா நடைபெறுகிறது.
மார்கழி மாதம் மற்றொரு முக்கிய விழா நடைபெறுகிறது.

இக்கோவிலின் கருவறை முற்றிலும் கல்லினாலானதாகும்.
வேலைப்பாடுமிக்கது. கருவறை மேலுள்ள விமானத்தில்
ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரங்களின் கருத்துகளை
விளக்கும் சிற்பங்கள் உள்ளன. கருவறை முன்னுள்ள
மண்டபத்தில் திருமலை மன்னர், அவரது குடும்பத்தினரின்
சிலைகள் உள்ளன. தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடுகள்
இச்சிலைகள்மீது உள்ளன.

இக்கோவிலின் கல்யாண மண்டபம், துவஜஸ்தம்ப
மண்டபம், ஏகாதசி மண்டபம்
ஆகியவை சிற்ப, கட்டடக்
கலைச் சிறப்புமிக்கவை.

கல்யாண மண்டபத்திலுள்ள 12 தூண்களில் காணப்படும்
யாளிகளின் சிற்ப அமைப்பு மிக நேர்த்தியானது.

துவஜஸ்தம்பத்தின் இரு பக்கங்களிலும் பின்புறம்
பெயர்களைக் கொண்ட அற்புத சிற்பப் படைப்புகள் உள்ளன :