36. தூத்துக்குடி
தமிழ்நாட்டின் ஒரு முக்கிய துறைமுக நகர் தூத்துக்குடி
ஆகும். இந்நகர் திருச்செந்தூரிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும்,
மாவட்டத் தலைநகரான திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ.
தொலைவிலும் அமைந்துள்ளது.
மன்னார் குடாக்கரையில்
அமைந்துள்ள தூத்துக்குடி
பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாகும். மன்னார்குடாப் பகுதி
முத்துக் குளித்தலுக்குப் புகழ் பெற்ற பகுதியாகும். தூத்துக்குடி
‘முத்துக் குளித்துறையின் தலைநகராக’ விளங்கிற்று.
பாண்டிய
மன்னர்களின் வீழ்ச்சியையடுத்து, கி.பி. 16ஆம் நூற்றாண்டின்
முற்பகுதியில், கேரளமன்னன் ‘உதயமார்த்தாண்டவர்மர்’
முத்துக் குளித்துறையில் ஆதிக்கம் செலுத்தினார். இம் மன்னரின்
அனுமதி பெற்று இஸ்லாமிய மக்கள் முத்துக் குளிப்பைக்
குத்தகைக்கு எடுத்து வாணிபம் செலுத்தினர். ஆனால்,
போர்ச்சுக்கீசியரின் வருகையினால், முத்துக்குளித்துறையில்
போர்ச்சுக்கீசியருக்கும், இஸ்லாமியர்களுக்கும்
போட்டி ஏற்பட்டது.
கி.பி. 1524முதல் முத்துக்குளித்தலில் போர்ச்சுக்கீசியர்கள்
செல்வாக்குப் பெறலாயினர். பரதர்கள் போர்ச்சுக்கீசியர்கள்
கண்காணிப்பில் முத்துக் குளிப்பை நடத்தினர். கி.பி. 1532இல்
போர்ச்சுக்கீசியர்கள் தூத்துக்குடிக்கு முதன்முதலில் வருகை
தந்தனர்.
போர்ச்சுக்கீசியர்கள்
தங்கள் வாணிபத்தைப் பெருக்கிய
தோடல்லாமல், இந்தியாவில் கத்தோலிக்கச்
சமயத்தைப் பரப்பவும்
முற்பட்டனர். போர்ச்சுக்கீசியர்களின் முயற்சியால்
பரதர்கள்,
கிறித்தவர்களாகச் சமய மாற்றமடைந்தனர். தூத்துக்குடிவாழ்
பரதர்களுக்குக் கி.பி. 1535இல் கோவா பெரியகுரு
மிக்கோல்
வாஸ் ‘திருநீராட்டு’ வழங்கினார்.
போர்ச்சுக்கீசியரின்
செல்வாக்கை விரும்பாத இஸ்லாமியர்கள்
ஒரு படையுடன் கி.பி. 1537இல் தூத்துக்குடியைத் தாக்கிக்
கொள்ளையிட்டனர். ஆனால், 1540இல்
போர்ச்சுக்கீசியர்கள்
தூத்துக்குடியைப் பிடித்துத் தங்கள் ஆதிக்கத்தில்
வைத்துக்
|