கோவில் தெய்வங்களைத் தெருக்களில் உற்சவமாகக்
கொண்டு வருவதற்குப் பயன்படுவது தேர் அல்லது
ரதம்
எனப்படும். இந்த ரதங்களின் அமைப்பை மாமல்லபுரக்
கல்ரதங்கள் கொண்டுள்ளன. இயற்கையாக அமைந்திருந்த
ஒரு குன்றை வெட்டியும், செதுக்கியும் இந்த ஐந்து ரதங்கள்
அமைக்கப்பட்டன என்றும், தர்மராஜ ரதத்தின் உச்சிப்
பகுதியே அக்குன்றின் உச்சியாக இருந்திருக்க வேண்டும்
என்றும் கருதப்படுகிறது. இந்த ரதங்கள் மகாபாரதத்தில்
வரும் ‘பஞ்சபாண்டவர்’ பெயர்களையும் திரௌபதியின்
பெயரையும் கொண்டுள்ளன. பஞ்ச பாண்டவர்களின்
பெயர்களைக் கொண்டிருந்தாலும் உண்மையில் இவை சிவன்,
துர்க்கை முதலிய தெய்வங்களின் வழிபாட்டிற்காக
அமைக்கப்பட்ட
கற்கோவில்களே ஆகும். இயற்கையாக இருந்த மலைப்பாறை
அதே இடத்தில் கோவிலாக வடிக்கப்பட்டது. ஆனால்
இவற்றில்
இப்பொழுது வழிபாடு இல்லை.
ஐந்து ரதங்களில் மிகப் பெரியதும், சிறந்ததும்
தர்மராஜ
ரதம் ஆகும். இது மூன்று மாடிகளைக் கொண்டுள்ளது. இந்த
ரதத்தை அமைக்கும் பணி மாமல்லன் காலத்தில்
தொடங்கப்பெற்று, பரமேஸ்வரவர்மன் காலத்தில் நிறைவு
பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ரதம்
சிவபெருமானின் வழிபாட்டிற்காக வடிக்கப்பட்டிருக்கலாம்.
இதன் சுவர்களில் பல தெய்வங்களின் அழகிய திருவுருவங்கள்
வடிக்கப்பட்டுள்ளன. இவ்விமானம் ஒரு கலைக்
கருவூலமாகக்
காட்சியளிக்கிறது. இவ்விமானம் பிற்காலத்தில்
எழுந்த கோவில்
விமானங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது எனலாம்.
அர்ஜு னன் ரதமும் சிவனுக்காக வடிக்கப்பட்டதாக இருக்கலாம்.
இதன் கிழக்குச் சுவரிலும் தெற்குச் சுவரிலும்
உள்ள பெண்களின
உருவங்கள் சிறந்த கலைப்படைப்புகள் ஆகும். பீம ரதம்
முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. துவாரபாலர் சிற்பங்பளைத்
தவிர இதில் வேறு சிற்பங்கள் இல்லை. இது திருமாலுக்கு
உரியதாய
இருக்கலாம். நகுல-சகாதேவ ரதம் இந்திரனுக்கு
வடிக்கப்பட்டதாக
இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுவும்
|