பக்கம் எண் :

78தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

4. வேலூர்

வட ஆர்க்காடு மாவட்டத்தின் தலைமையிடம் வேலூர்
ஆகும். இன்று வேலூரின் ஒரு பகுதியாக உள்ள வேலப்பாடி
என்ற பெயர் ‘வேலூர்’ ஆயிற்று என்பர். இந்நகர்
கி.பி. 16ஆம் நூற்றாண்டில் நாயக்கத் தலைவர்களின்
ஆட்சியிடமாக இருந்தது. இவர்கள் விஜயநகர அரசின்
ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர். வேலூரில் ஆட்சி புரிந்த
நாயக்கத் தலைவர்களில் முக்கியமானவர்கள் சின்ன பொம்மன்,
லிங்கமன்
ஆவர். லிங்கம நாயக்கர் விஜயநகர அரசுக்குக்
கப்பம் கட்டாமல் ஆட்சி புரியத் தொடங்கவே, கி.பி. 1604இல்
முதலாம் வேங்கடன்
என்ற சந்திரகிரியில் ஆட்சிபுரிந்த
விஜயநகர மன்னர் வேலூரின் மீது படையெடுத்து வென்றார்.
லிங்கமர்
கைதானார். கி.பி. 1606முதல் சந்திரகிரியிலிருந்த
விஜய நகர வம்ச மன்னர்கள் வேலூரைத் தங்கள்
ஆட்சியிடமாகக் கொண்டனர். இது முதல் வேலூர் ‘ராயவேலூர்’
ஆயிற்று. கி.பி. 1647இல் மீர் ஜம்லாவின் தலைமையிலான
படைகள் வேலூரை பிடித்தன. இதனால் விஜய நகர அரசர்
மூன்றாம் ஸ்ரீரங்கன்
வேலூரை விட்டுச் சென்றார்.
கி.பி. 1676இல் துக்கோஜி ராய் தலைமையிலான மராத்தியப்
படைகள் 4 மாதங்களுக்கும் மேலாக முற்றுமையிட்டு வேலூரை
வென்றன. இதனால் வேலூரில் பிஜப்பூர் ஆட்சி நீங்கி மராத்தியர்
ஆட்சி ஏற்பட்டது. கி.பி. 1710இல் தாவுத்கான் என்ற மொகலாயத்
தளபதி டில்லியிலிருந்து வந்து மராத்தியரை வேலூரிலிருந்து
அகற்றினார். இதனால் வேலூர், மொகலாயர் ஆட்சிக்குட்பட்டது.
பின் வேலூர், ஆர்க்காட்டு நவாப் ஆட்சியின்கீழும் பின்
ஆங்கிலேயர் ஆட்சியின்கீழும் வந்தது. வேலூர் தற்பொழுது
வட ஆர்க்காடு மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது.