மில்லாத ரெங்கநாதர் கோவிலும் சிப்பாய்கள் தங்கிய கட்டடமும்
இதர சில கட்டடப் பகுதிகளும் உள்ளன.
இராஜகிரி மலைக்கோட்டை
செஞ்சி-திருவண்ணாமலை சாலையின் இடதுபுறம்
சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இராஜகிரி
மலைக்கோட்டை உள்ளது. இராஜகிரிக்குச் செல்லும் வழியில்
பட்டாபி ராமர் கோவில் உள்ளது. இராஜகிரி கோட்டைக்குள்
மராத்தியக் கட்டடக்கலை முறைப்படி உருவான கல்யாண
மண்டபம் உள்ளது. 7 அடுக்குகளைக்கொண்ட இக்கட்டடம்
மரத்தைப் பயன்படுத்தாது கட்டப்பட்டுள்ளது. கல்யாண
மண்டபத்தை அடுத்து வெடிமருந்துச்சாலை, பெரிய தானியக்
களஞ்சியம், வீரர்கள் தங்கியிருந்த கட்டடங்கள், இராஜா தேசிங்கின்
உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் மேடை,
வெங்கட
ரமணா கோயில் ஆகியவை உள்ளன. வெங்கடரமணா
கோவிலின் வேலைப்பாடுமிகுந்த ஒற்றைக் கற்றூண்கள்
சிலவற்றைப் பெயர்த்து, பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்குக்
கொண்டு சென்றுள்ளனர்.
இராஜகிரி மலைக்கோட்டையில் 9 வாயில்கள் உள்ளன.
எட்டாவது வாயிலுக்குள் நுழையுமிடத்தில் மரப்பாலம் ஒன்று
உள்ளது. உச்சியில் நாணயச்சாலை, தெய்வமில்லாத ரெங்க
நாதர் கோவில், இராஜா தேசிங்கு ‘தர்பார்’ மண்டபம், மணிக்
கூண்டு ஆகியவற்றைக் காணலாம்.
இராஜகிரி மலைக்கோட்டையை அடுத்து
உட்கோட்டை
(Inner Fort) உள்ளது. இக்கோட்டைப் பகுதியில்
புதுச்சேரி
வாயில், வேலூர் வாயில் ஆகியவை உள்ளன. புதுச்சேரி
வாயில் அருகில் பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய கட்டடங்களின்
எஞ்சிய பகுதிகள் உள்ளன. வாயிலருகிலுள்ள கோட்டைச்
சுவரில், ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லாகான்
கி.பி. 1713இல் தேசிங்குராஜனை வீழ்த்தி இக்கோட்டையைப்
பிடித்த வெற்றிச் செய்தியைக் குறிக்கும் ‘பாரசீக மொழிக்
கல்வெட்டு’ உள்ளது.
|