பக்கம் எண் :

96தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

8. கடலூர்

தென் ஆர்க்காடு மாவட்டத்தின் தலைமையிடம் கடலூர்
ஆகும். இது ஒரு துறைமுக நகர். கெடிலம் நதிக்கரையில்
இந்நகர் அமைந்துள்ளது. திருப்பாதிரிப்புலியூர் கடலூரின்
ஒரு பகுதியாகும். திருப்பாதிரிப்புலியூரில் பாடலீசுவரர்
கோவில்
உள்ளது. இது சிறந்த சிவ வழிபாட்டுத்தலம் ஆகும்.
தேவாரப் பாடல்கள் இத்தலத்தைக் குறிப்பிடுகின்றன.
பாடலிபுத்திரம்
என்னும் இவ்பூர்ப்பகுதியில் முற்காலத்தில்
சமண மடமும், சமணர் கோவிலும் இருந்தன. கி.பி. 5 ஆம்
நூற்றாண்டிற்கும், கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட
காலத்தில், திருப்பாதிரிப்புலியூர் ஒரு சிறந்த சமண மையமாக
விளங்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

கடலூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி புனித டேவிட்
கோட்டைப்
பகுதியாகும். இக்கோட்டை இருக்கும் நிலப்பகுதியை
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் சென்னை ஆளுநர் ஏல்
பிரபு
முயற்சியால் மராட்டியத் தலைவர் இராஜாராமிடமிருந்து
கி.பி. 1690இல் விலைக்குப் பெற்று இவ்விடத்தில் ஒரு
கோட்டையைக் கட்டினர். இது புனித டேவிட் கோட்டை
என்ற பெயரைப் பெற்றது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு
அடுத்து கிழக்குக் கடற்கரையில் இக்கோட்டை ஆங்கிலேயருக்கு
முக்கியத்துவம் பெற்றதாக விளங்கிற்று. முதல் கர்நாடகப் போரின்
பொழுது (கி.பி.1746) பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியின் ஆளுநர்
டியூப்ளே
தலைமையில் சென்னையைப் பிடித்துவிட்டு புனித
டேவிட் கோட்டையினையும் தாக்கினர். ஆனால்,
பிரெஞ்சுக்காரர்களால் இக்கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
கி.பி. 1746முதல் 1752வரை இக்கோட்டை சோழ மண்டலக்
கரையிலுள்ள ஆங்கில வாணிபத் தலங்களின் தலைமையிடமாக
இருந்தது. மூன்றாவது கர்நாடகப் போரின் பொழுது பிரெஞ்சுத்
தளபதி லாலி இக்கோட்டையைப் பிடித்தார்