பக்கம் எண் :

98தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

பிரெஞ்சுக்காரர்களின் வாணிப ஆதிக்கத்தை ஏற்படுத்தவும்,
ஆங்கிலேயரின் செல்வாக்கை ஒடுக்கவும் முற்பட்டார். இதனால்
கர்நாடகப் போர்களில்
ஈடுபட்டார். ஹைதராபாத் நிஜாமைத்
தமது செல்வாக்கிற்கு உட்படுத்தினார். ஆர்க்காட்டின்
நாவப்பதவிக்கு சந்தாசாகிப்பிற்கும் முகமதலிக்கும் போட்டி
ஏற்பட்ட பொழுது சந்தாசாகிப்பிற்கு ஆதரவு கொடுத்தார்.

முதல் கர்நாடகப் போர் காலத்தில் (1746-48)
பிரெஞ்சுக் காரர்கள் சென்னையைப் பிடித்தபொழுது
ஆங்கிலேயர்கள் புதுச்சேரியை முற்றுகையிட்டனர். 1748இல்
ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையின்படி போர் முடிவுற்றது.
இரண்டாவது கர்நாடகப் போரின்பொழுது புஸ்ஸி என்ற
பிரெஞ்சுத் தளபதி செஞ்சியைக் கைப்பற்றினார்(1750).
டியூப்ளே
மிக்க திறமை வாய்ந்தவராக இருந்தபோதிலும்,
இராபர்ட் கிளைவின்
ஆர்க்காட்டு வெற்றி (1751) இவரது
திட்டங்களை முரியடித்தன. மூன்றாவது கர்நாடகப் போரில்
(1757-61) பிரெஞ்சு ஆளுநராகத் தளபதி லாலி திறமையாகச்
செயல்பட்டாலும், ஆங்கிலத் தளபதி சர் அயர் கூட்டின்
வந்தவாசிப்
போர் வெற்றியினால் (1760) இந்தியாவில்
பிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியடைந்தனர். ஆங்கிலேயர்கள்
ஒரு பெரிய ஆங்கில அரசை இந்தியாவில் ஏற்படுத்தி 1947வரை
ஆட்சி புரிந்தனர். பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி, மாஹி,
காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளை மட்டும்
கி.பி. 1954வரை இந்தியாவில் வைத்திருந்தனர். கி.பி. 1954இல்
இவை இந்திய யூனியனுடன் இணைந்தன.

தமிழ்நாட்டில் கடலூருக்கு அருகில் அமைந்துள்ள இந்திய
யூனியன் பிரதேசமாகப் புதுச்சேரி விளங்குகிறது.

1750 முதல் 1761 வரை செஞ்சிக்கோட்டை
பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்தது. பிரெஞ்சுக்காரர்கள்
செஞ்சிக்கோட்டையிலுள்ள வெங்கடரமணி சுவாமி
கோவிலிலிருந்து கொண்டு வந்த கற்றூண்களைப் புதுச்சேரி
நகரில் கடற்கரை அருகிலுள்ள ஒரு திடலில் டியூப்ளே சிலை
அருகில் இன்றும் நாம் காணலாம். இந்தியச் சிற்பங்கள்மீது
பிரெஞ்சுக்காரர்கள் காட்டிய ஆர்வத்தை இக்கற்றூண்கள்
எடுத்தியம்புகின்றன.