பக்கம் எண் :

378தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

790-792ஆம் ஆண்டுகளில் பாண்டிநாட்டுக் காவலனாக இருந்தான். இவன்
மகன் வரகுண மகாராசன் என்பவன். சோழநாடு முழுவதிலும் வரகுணனின்
கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. எனவே, அவன் சோழநாடு முழுவதையும்
வென்று தன் குடைக் கீழ் கொண்டுவந்தான் என்று ஊகிக்கலாம்.

     வரகுணன் சைவப் பற்றுடையவன்; மணிவாசகரின் வாழ்க்கையுடன்
தொடர்பு கொண்டிருந்த பெருமை வாய்ந்தவன்; அவருடைய பாடல்களில் தன்
பெயரும் இடம்பெறும் பேற்றைப் பெற்றவன். அவன் நாற்பத்து மூன்று
ஆண்டுகள் (கி.பி.792-835)