பக்கம் எண் :

480தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     கவர்னருக்கும் 1801-ல் நிறுவப்பட்ட உயர்நீதி மன்றத்து (Supreme
Court) நீதிபதி ஒருவருக்குமிடையே பூசல்கள் தோன்றின. அரசாங்கம் போலீசு
படை ஒன்றை நிறுவிற்று. உயர்நீதி மன்றத்து (Supreme Court) நீதிபதி சர்
ஹென்றி கிவில்லிம் (Sir Hery Gwillim) என்பார் போலீசு படை என்பது
கொடுங்கோன்மையை விளைப்பதாகும் என்று அதை எதிர்த்தார்.


அவருக்கும் தலைமை நீதிபதிக்கும் இதனால் மனக்கசப்பும் பூசலும்
விளைந்தன. ஆகவே, கிவில்லிம் பதவியினின்றும் விலக்கப்பட்டார்.

     சென்னையில் நிறுத்தப்பட்ட வெள்ளையர் படையில் உயர் பதவிகளில்
இருந்த அலுவலர்கள் கலகம் உண்டு பண்ணினார்கள்.