பக்கம் எண் :

256தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

1974) இப்பல்கலைக் கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராகவும்
பணியாற்றினார்.

மதுரைப் பல்கலைக் கழகம் என்ற பெயர், அ.இ.அண்ணா
தி.மு.க. அரசின் முயற்சியால் 1978ஆம் ஆண்டுமுதல் மதுரை
காமராசர் பல்கலைக்கழகம்
என்று மாற்றப்பட்டது.

மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி
மாவட்டங்களிலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகள், இதர சில
கல்வி நிறுவனங்கள் இப்பல்கலைக் கழகத்தின் ஆட்சி
எல்லைக்குள் வருகின்றன. இப்பல்கலைக் கழகம் 1971ஆம்
ஆண்டுமுதல் அஞ்சல்வழிக் கல்வித் துறையை ஆரம்பித்து
கல்விப்பணி ஆற்றி வருகிறது. 1978முதல் ‘திறந்தவெளிப்
பல்கலைக் கழக முறையை
‘க் கொண்டுவந்துள்ளது.
இப்பல்கலைக் கழகத்தில் ஒரு சிறந்த நூல் நிலையம்
உள்ளது. இந்நூல்நிலையத்தில் 1,50,000க்கு மேற்பட்ட
நூல்கள் உள்ளன.

கோவலன் பொட்டல் அகழ்வாராய்ச்சி

1980ஆம் ஆண்டு மதுரை நகரை அடுத்த
பழங்கானத்திலுள்ள கோவலன் பொட்டலில் தமிழ்நாடு
அரசின் தொல்பொருள் துறையினர் அகழ்வாராய்ச்சி நடத்தினர்.
சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன் இறந்த இடம், பின்
கோவலன் பொட்டல்
என்றாயிற்று என்று கூறப்படுகிறது.
அகழ்வாராய்ச்சியில் சில முதுமக்கள் தாழிகளும், சுமார் 2000
ஆண்டுகட்கு முற்பட்ட மனிதனின் எலும்புக்கூடு, இதுவரை
காணப்படாத சங்ககாலச் செப்புக்காசு முதலியவை காணப்பட்டுள்ளன.
இந்த அகழ்வாராய்ச்சி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுத்
தடயங்களை நமக்குத் தந்துள்ளது. ஆய்வு நடத்திய இடத்திலேயே
அகழ்ந்து காணப்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.