பக்கம் எண் :

தம

 

 

தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள்

 

அழகுக் கலைகள் எவை?

 

    மனிதன் மிகப் பழைய காலத்திலே காட்டு மிராண்டியாக வாழ்ந்தான். இருக்க வீடும்,
உடுக்க உடையும், உண்ண உணவும் உண்டாக்கிக்கொள்ளத் தெரியாமல் அக்காலத்திலே
மனிதன், விலங்குபோல அலைந்து திரிந்தான். பிறகு அவன் மெல்லமெல்ல சிறிது சிறிதாக
நாகரிகம் அடைந்தான். வசிக்க வீடும், உடுக்க உடையும், உண்ண உணவும்
உண்டாக்கிக்கொள்ளத் தெரிந்து கொண்டான். இதனால் அவன் மிருக வாழ்க்கையிலிருந்து
விலகி நாகரிக வாழ்க்கை பெற்றான். ஆனால், மனிதன் நாகரிக வாழ்க்கை அடைவதற்குப்
பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன. மனிதன் நாகரிகம் பெறுவதற்குப் பேருதவியாக
இருந்தவை அவன் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்ட பலவகையான தொழில்களேயாகும்.
ஒவ்வொரு தொழிலையும் கற்றுத் தேர்வதற்கு அவனுக்குப் பல நூற்றாண்டுகள் கழிந்தன.1

1. மனிதன், மிருக வாழ்க்கையிலிருந்து நாகரிக வாழ்க்கையடைந்த வரலாற்றைக் கூறும் 
  நூலுக்கு ஆந்த்ரபாலஜி (Anthropology) என்று பெயர்
.