30 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
ஆலயம், முற்காலத்தில் மரத்தினால் அமைக்கப்பட்டிருந்தது; பிற்காலத்தில்
கருங்கல்லினால்
கட்டப்பட்டது. கல்லினால் கட்டப்பட்டாலும், அதன்
தூண்கள், கூரை
(விமானம்) முதலிய
அமைப்புகள் மரத்தினால்
அமைக்கப்பட்டது போலவே
காணப்படுகின்றன. சிதம்பரக்
கோயிலின்
பழைய கட்டடங்கள் எல்லாம் மரத்தினாலே
அமைக்கப்பட்டிருந்தன
என்பதில்
சிறிதும் ஐயமில்லை. திருக்குற்றாலத்துச் சித்திரசபைக்
கோயில் ஆதியில் மரத்தினால்
கட்டப்பட்டிருந்தது. முற்காலத்தில்
மரத்தினாலே
கோயில்
கட்டடங்கள் கட்டப்பட்டன
என்பதற்குச் சான்று,
பிற்காலத்தில் கல்லினால்
அமைக்கப்பட்ட
கோயில் கட்டடங்களிலே,
மரத்தைச் செதுக்கி அமைக்கப்பட்டது
போன்ற அமைப்புகள்
காணப்படுவதுதான்.
மரக் கட்டடங்கள் வெயிலினாலும் மழையினாலும் தாக்குண்டு
விரைவில்
பழுதுபட்டு
அழிந்துவிடும் தன்மையன. முக்கியமாக
மேல்பகுதியாகிய விமானம்
விரைவில் பழுதடைந்தது. ஆகவே, அவை
பழுதுபடாதபடி அவற்றின் மேல்
செப்புத் தகடுகளை
வேய்வது பண்டைக்
காலத்து வழக்கம். செப்புத் தகடு வேய்ந்த
கூரை விரைவில
பழுதடையாது.
முற்காலத்தில், சிதம்பரம் முதலிய கோயில்களின் கூரைகளில், சில
அரசர்கள்
செப்புத் தகடுகளையும் பொற்றகடுகளையும் வேய்ந்தார்கள் என்று
கூறப்படுகின்றனர்.
அக்காலத்தில் மரத்தினால் கட்டடம்
அமைக்கப்பட்டிருந்தபடியினால்,
அவை விரைவில்
பழுதாகாதபடி செப்புத்
தகடுகளையும்
பொற்றகடுகளையும் அரசர்கள்
கூரையாக
வேய்ந்தார்கள்.
செங்கற் கட்டடங்கள்
மரக் கட்டடம் விரைவில் பழுதடைவதோடு எளிதில் தீப்பிடித்துக்
கொள்ளும்.
ஆகவே, பிற்காலத்தில் செங்கல், சுண்ணாம்பு, மரம் முதலியவை
கொண்டு
கோயில்களைக்
கட்டத் தொடங்கினார்கள். செங்கற் கோயில்கள்,
|