பக்கம் எண் :

66

66

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


    

         திருவொற்றியூர் மூலக்கோயில், இராஜேந்திரசோழன் காலத்தில்
புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய சிற்பியின் பெயர்
வீரசோழ தச்சன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ரவி என்பதாகும்.2
சிதம்பரத்து வடக்குக் கோபுரத்தைக கட்டிய சிற்பியரின் உருவங்களும்
பெயர்களும் வடக்குக் கோபுரத்து உட்சுவரில் எழுதப்பட்டுள்ளன.
அப்பெயர்களாவன: விருத்த கிரியில் கேசவப் பெருமாள்; அவர்
மகன் விசுவமுத்து. திருப்பிறைக்கோடை
ஆசாரி திருமருங்கன்; அவருடைய
தம்பி காரணாச்சாரி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 2.S.I.I. Vol. IV, P. 185