பக்கம் எண் :

104தமிழ்க்காதல்

மேலன்று; அந்நெறிப்பட்ட மகள் மேலாம். நாமிருக்க, மணஞ் செய்துவைப்பது
நம் கடமையாயிருப்ப, கடமையை உணரும் நம்மை மறந்து, மகள் தானே
தனக்கொருவனைத் தேடலாமா? இம்முதலெண்ணம் எப் பெற்றோர்க்கும்
எழவே செய்யும். சமுதாய முன்னிலையில் குடிமானத்திற்கு இழுக்கெனவே
தாய் தந்தையர் துடிப்படைவர். இத்துடிப்பு கடமை யுணர்ச்சியில்
எழுவதேயன்றிக் களவு வெறுப்பில் எழுவதன்று காண். தனக்குப் பிடித்தவனை
மகள் மணப்பதிலோ அவளை மணப்படுத்துவதிலோ பெற்றோர் தடையாக
நில்லார். தமக்குப் பிடித்தவனைத்தான் தம்மகள் பிடித்தவனாக்கிக் கொள்ள
வேண்டும் என்று வன்மம் செய்யார். இஃது அகத்திணை இலக்கியம் காட்டும்
பெற்றோர்
இயல்பு எனினும் கன்று தானே அவிழ்த்துக் கொண்டு பால்
குடிப்பதை மாட்டாளி விரும்புவதுண்டோ? பாராட்டிச் சீராட்டிப் பருவம்வரை
வளர்த்த மகளின் மனப்போக்கே-உரிமையுணர்ச்சியே-பெற்றோர்க்குச் சிறிய
மனக்கசப்பை ஊட்ட வல்லதாகும். மனங்கசப்பினும், காதற்களம் தெரிந்தபின்,
மகள் விருப்பத்திற்கு மாறு செல்லும் பெற்றோரிலர். வேறாக ஒருவனை
மணமகனாக விதிக்கும் பெற்றோரிலர். அதுபோல மகள் செய்தியைக்
கண்டதும் கேட்டதும், ஆம், நன்கு செய்தாள், வல்லவள் என்று முகமலர்ந்து
வாய்மொழியும் பெற்றோருமிலர்.


     அவரும்,
     தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து
     ஒருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி
     இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று
     தெருமந்து சாய்த்தார் தலை (கலி. 39)


மனிதவுணர்ச்சியும் தமிழ் நாகரிகமும் பின்னிய பாட்டு இது. தங்கையின்
களவுப்புணர்ச்சியைத் தாய் சொல்லாமற் சொல்லக்கேட்ட அண்ணன்மார்கள்
‘குடிவடுப்பட இப்படியும் நடந்தது கொல்? நடக்கத் தூண்டிய அவ்வாடவன்
யார்? ஒருகை பார்ப்போம்’ என்று கொதித்தனர். கூரிய அம்பினையும்
கொடிய வில்லையும் வீரத்தால் நோக்கினர். இது தாகது என்று ஒருகால்
வீறிட்டு எழுந்தனர். விளைவு என்னாமோ என்று மறுகால் அமைந்தனர்.
இவ்வுள்ளப் பூசல் சில பொழுதுவரை நின்றது. இவளுக்கு ஒருவன், அவனுக்கு
ஒருத்தி
வாழ்வுக்கு வேண்டும்; தன் வாழ்வுக்குத் தக்காரைத் தானே தேடி
எய்துவதில் பிழைபாடு என்னோ? யார்பாலும் குற்றம் இல்லை என்று
தெளிந்தனர். தெளியவே, காதலரைப் பிரித்தற்குப் புணரவிருந்த அம்பும்
வில்லும் கூடாதொழிந்தன. போர்க்களக் கருவிகளைத் தங்கையின் காதற்
களத்தில் பயன்படுத்த எடுத்தோமே? காதலுக்கு வீரம் துணையாக வேண்டும்;
என்செய்தோம்? என்று