பக்கம் எண் :

அகத்திணை ஆராய்ச்சி17

     கலித்தொகை       ...   149
     பரிபாடல்          ... 8 (22 பாடல்களுள்)
     பத்துப்பாட்டு       ... 4 (!0 பாடல்களுள்)
                                                      -----------
        கூடிய அகப்பா    1862
                      --------
     அகநானூறு நற்றிணை குறுந்தொகை என்ற முதன்மூன்று தொகைகளுள்,
தொகை முறையில் ஒன்றுபோல்வனவே. இவற்றுள் அடங்கிய பாட்டுக்களைப்

பாடினோரும் பலர். அவர் பாடிய அகத்துறைகளும் பல. இங்ஙன் ஒத்த
அமைப்புடையவை ஒரு தொகையாகாது. மூன்று தொகைகள் ஆயதற்குக்
காரணம் அடிக்கணக்கே என்பது அறிந்த செய்தி. 4 முதல் 8 அடியுள்ள
பாக்கள் குறுந்தொகைப் பட்டன. 9 முதல் 12 அடிப்பாக்கள் நற்றிணையாயின.
13 முதல் 31 அடிப் பாடல்கள் நெடுந்தொகை என்னும் அகநானூறாக
அமைந்தன. பாடினோர் அடிக்கணக்கை மனத்தில் வைத்துப் பாடவில்லை
என்பதும், அடியெல்லை வகுத்துக் கொண்ட திறம் தொகுத்தோர்க்கு உரியது
என்பதும் நம் நினைவிற்கு வேண்டும். கடலால் கறையானால் அயல்
நாகரிகத்தால் தமிழ் மக்களின் பேணாப் பெரும் பேதைமையால், ஐயகோ!
அழிந்து போய நூல்கள் அளவிலவே; எஞ்சிய சில நூற்பாடல்களையேனும்
தேடித் தொகுக்க வேண்டும், தொகுத்துக் காக்கவேண்டும் என்னும் துடிப்பு
அன்றொருநாள் எழுந்தபோது இத் தொகை நூல்கள் உருவாகின.
சிதறிக்கிடந்த தனிப்பாக்களுக்கு நூல் வடிவருளிய நன்மக்கள் அனைத்துப்
பாடல்களையும் ஒரு தொகையாக்கின், பெரிதாய் விரிந்து பரவலற்று மீண்டும்
அழியினும் அழியும் என்று அஞ்சிய நல்லச்சமே, தொகை பலவாயதற்குக்
காரணம் என்று கருதலாம்.


     பாடினோர் அடியளவை நினைந்திலர் எனினும், அடியின்
சின்மையானும் பன்மையானும், ஓராற்றால் பொருளாட்சி வேறுபடக்
காண்கின்றோம். அடி பலவாய அகநானூற்றில் உரிப்பொருளைக் காட்டிலும்
முதற்பொருள் கருப்பொருள்களான இயற்கை பலபடப் புனையப்பட்டுள்ளது.
இப்புனைவுகள் நிறந்தீட்டவல்ல ஓவிய வனப்பின. கருத்தை உளங்கொளச்
சொல்லுமளவில்
அமையாது, கண் கொளவும் சொல்லவிரும்பும் புலவன் தக்க
புறத்தோற்றம் அமைப்பான். அப்போது அடிகள் பலவாய்விடும். பன்மலர்
பூத்தாலன்ன காதலியைப் பிரிந்த காதலன் பொருளீட்டச் செல்லும் வழி,
கொலைஞரும் கள்வரும் விலங்கும் வெப்பமும் நீங்காத நீரில் வெஞ்சுரம்
என்று சுட்டச் சில்லடிகள் போதுமா? நினைத்த வினையை இடையூறு கடந்து
இனிது முடித்த தலைவன் தலைவியின் நினைவோடு வரும் வழி, நீர் நிரம்பி
நிலமறையப் பூப்பொதுளிப் பக்கமெல்லாம் பசுமை இலங்கக் கலைமான்
பிணைமானோடு துள்ளித் திரியும் முல்லைக்காடு என்று சொல்ல, அடிகள்
பல வேண்டுமன்றோ! தலைவனுடன் போகிய