பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 174

  அவன் சொல்வதெல்லாம்
வீராப்பே.
அதைச் சொல்லப்போனால்
பொல்லாப்பே
 
என்று அறிவிக்கும் ‘செல்லப்பிள்ளை, மற்றும் குச்சுநாய், வயிற்றைக்கேள், உலகம்
போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும், ‘வயிற்றைக்கேள்’ ரசமானது.
 
  தலையைச் சொறி
நாக்கைக் கடி.
பல்லை இளி
முதுகை வளை
கையைக் கட்டு.
காலைச் சேர்.
என்ன இது?
வயிற்றைக் கேள்.
சொல்லுமது.
 
புதுமையான தாலாட்டு ஒன்றையும் தந்திருக்கிறார் அவர்,
 
  யாரும் அடிக்காமல்
நீ ஏன் அழுகின்றாய்?
நீ பிறக்காமலிருக்க
நான் முயன்றேன்
என்ற கடுப்பாலோ;
காரணமில்லாமல்
நீ ஏன் சிரிக்கின்றாய்
எனை ஏமாற்றி
நீ பிறந்துவிட்டாய்
என்ற களிப்பாலோ!
 
     இவருடைய கவிதைகள் பலவற்றில் நையாண்டித் தொனிகலந்து உயிரூட்டுகிறது.
கண்ணே நீ, எதிர்ப்பு, படிகள் போன்றவை இத்தகையன. உதாரணத்துக்கு,
‘மேற்கத்தியோரே’ கவிதை இங்கே தரப்படுகிறது.
 
  ஒரு பக்கம்
வாழ வழிவகுக்கும்
சாகக் குழி பறிக்கும்
உங்களைப் போலல்ல
நாங்கள்.
நாங்களோ
வாழவும் விரும்ப மாட்டோம்
சாகவும் துணியமாட்டோம்
உங்களைப் போலல்ல
நாங்கள்,
வாழாமல் வாழ்ந்து