| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 22 |
தமிழ்மொழியைக் காத்தனர் என்பதும், ‘ரிதும்’ என்று இக்காலத்தில் வழங்கிவருஞ் சொல் ஆங்கிலச் சொல்லல்ல தமிழ்ச் சொல்லே என்பதும், இன்னன போற்பிறவும் தெற்றென விளங்க, சூறாவளி ஏழாவது இதழில் வெளியாகியுள்ள ‘வசனகவிதை’ என்ற கட்டுரையைக் கண்ணுற்றுக் கலங்கியாப்பின் பெருமையைக் காக்கத் தொல்காப்பியனார் மரபிற் றோன்றிய எதுகைக் கீரி, மோனைப் பூனை முத்தமிழ்க் கோடரி உளறுவாய்ப் புலவர் மாணாக்கனார் தவளைக் குரலார் யாத்த செய்யுளொன்றைக் கீழே வெளியிடத் துணிந்து ஏட்டுப் பிரதியிலுள்ளவாறே வெளியிட்டால் விளங்குவதரிதாமென நினைத்து சிற்சில மாறுதல்களோடு வெளியிடப் போந்துளமாகலின் அத்தொண்டைச் செவ்வனே ஆற்றற்குரிய ஆற்றலை அளித்த அருமறை முதல்வன் திருவடி சிந்தித்து வணங்குகின்றனம்; | | | கரும்பு போலத் தித்திக்கும் கற்கண்டைப் போலினிதாகும் துரும்பு போல வலிதாகும் தூவென்றால் பின் சூவாகும் கரும்பு மலர் கண்டிசை பாடும் கடுகற் பொதிய முனிவன் சொல் விரும்பிச் சீர்தளை யெதுகையினை விரும்பிற் பொருளை விரும்புவரோ? விரும்பு சோளக் கவின் கொல்லை வித்தங் காக்கு விம்மம் போல திரும்பிப் பொருளைப் பாராமல் திருதிரு வென்று தயங்காமல் அரும்பு சொல்லின் செல்வமெலா மசையில நிறைந்து நேராக எறும்பு கல்லைத் தோய்ப்பதுபோ லிசைமின் னெதுகை சீர்தளையே. தளையைத் தளர்த்த முற்படுவீர் தலைவேதனையைக் கவி யென்பீர் கிளைக்கு மேலே நின்றிடுவீர் கீழ்மர மெய்யு மதியுடையீர் தளைசீர் மோனை யெதுகைப் பாவும் பாவினமு மென்றாகி விளைக்குஞ் சேற்றுநிலந்தனிலே விழுத்தீராயி னெழுந்தீரே எழுந்தீரென்றே னேதென்றா லெழுதாக் கவிதை யெலா முமதே செழுந்தீ சூழுஞ் சுடுகாட்டிற் செந்நாப் பேய்களாடுவதும் கொழுந்து விட்டே வுலக்கைத்தாய் கோலா கலமாய் வளருவதும் விழைந்து கண்டு விரைவில்நீர் வீங்கு யாப்பாற் கவியாவீர் | | | |
|
|