பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 68

  அறிவின் சுயேச்சையை
அமுக்குப் பிசாசுகள் எப்படி சிறைப்படுத்தி விட்டன!
எப்படி சுவடிகளின் குவியல்
வசிக்கும் இடத்தைப் பறித்துக் கொண்டன!
எலும்பு தெரியும் ஏழ்மை
எவ்வளவு ஏங்கி ஏங்கி விழுகிறது!
நோயின் புலிக்குரல் எப்படி அஞ்ச வைக்கிறது!
உலகம் பொய், சாவு மெய்
என்ற எவ்வளவு சாஸ்திரீயப் புலம்பல்!
பின் சோனியாகாமல் என்னாவேன்?”

     இருப்பினும், மனம் தேறுகிறது. சிறுகமுகின் போராட்டத்தைப் பார்த்து, உள்ளத்தில்
தெம்பு பிறக்கிறது. உடனே-
 
  ‘போர் என்ற சங்கு முழங்குகிறது.
அழகின் சிரிப்பு அண்டமாய்ப் பிறந்திருக்கிறது,
அகண்ட ஒளி அனாதியாய் மலர்ந்திருக்கிறது.
அழகும் அத்யாத்மமும் அழைக்கின்றன.
ஜீவா! விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்?
அமுதத்தை நம்பு,
ஒளியை நாடு,
கமுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்.
சூழ்வின் இருள் என்ன செய்யும்?

     இவ்வாறு நம்பிக்கை ஊட்டுகிறார் கவிஞர். மண்ணை மட்டுமல்ல, விண்ணையும்
அளக்க முயல்வன அவரது கவிதைகள். கலைஞனின் பெருமிதத்தோடு அவர்
சொல்லவில்லையா என்ன-
 
  நாங்களோ கலைஞர்
ஆமைபோல் உணர்ச்சியின்
கிணற்றில் அமிழ்வோம்.
முதுகோடு கொண்டு விதியை எதிர்ப்போம்.
கீழுலகேழும் தயங்காது இறங்கி
ஜீவன்கள் லீலையில் கூசாது கலப்போம்;
அணிலைப்போல் கொம்பேறி
ஒளிக்கனி கடிப்போம்
சாலையின் மேலேறி
செம்மலர் உதிர்ப்போம்
மேலுலகேழும் படகோட்டிச் செல்வோம்!

(கொம்பும் கிணறும்)


     இப்படி ஜீவன்களின் லீலையை ‘சக்தி’யின் பெருமையை உஷையின் சிரிப்பை,
இயற்கை அழகுகளைப் பாடுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லையே! கவி மரபுதானே
என்று சொல்லலாம். ஆனால்,