பக்கம் எண் :

68நாமக்கல் கவிஞர்

  
  சோறும் துணியும் இல்லாமல்
சோம்பியிங் கெவரும் நில்லாமல்
வீறும் புதுமைப் பொதுவாழ்வின்
விடுதலை இன்பம் வேண்டுமென்றால்.
 
(தே)
 
  பட்டினி கிடப்பவர் இல்லாமல்
படிக்கா தவரெனச் சொல்லாமல்
எட்டின மட்டிலும் எல்லாரும்
இன்புறும் ராஜ்ஜியம் தென்படவே.
(தே)
 
இந்தியர் எல்லாம் ஒரு ஜாதி
யாருக்கும் இங்கொ ருநீதி
நொந்தவர் ஒருவரும் இல்லாத
நூதன அரசியல் உண்டாக்க.
(தே)
 
ஜாதிக் கொடுமைகள் நீங்கிடவும்
சமரச உணர்ச்சிகள் ஓங்கிடவும்
நீதிக்கெல்லாம் இருப்பிடமாய்
நிற்குமோர் அரசியல் உருப்படவே.
(தே)
 
வரிகளை யெல்லாம் குறைத்திடவே
வரும்படி விளைவுகள் நிறைந்திடவே
விரிகிற பொதுப்பணச் செலவையெல்லாம்
வெட்டிச் சிக்கனம் தொட்டிடவும்.
(தே)
 
பணத்தின் பெருமையைப் போக்கி வைப்போம்
பண்டங் களின்விலை தூக்கிவைப்போம்
குணத்தின் பெருமைகள் இல்லாத
குலமும் பிற இனிச் சொல்லாது.
(தே)
 
மனிதனை மனிதன் ஏய்ப்பதையும்
மக்களைப் போரில் மாய்ப்பதையும்
தனியொரு வழியில் தடுத்திடஓர்
தருமம் உலகினில் தழைத்திடவே.
(தே)