இரக்கத் தன்மையாகிய கருணை சிறிதும் இல்லாமல், பொருள்
தேடுவதிலேயே
விருப்பங்கொண்டு, நம்மிடம் அன்பு நிலைபெறாத உள்ளம்
உடையவர்’’ என்பதனால்
இவ்வுண்மையைக் காணலாம்.
இல்லறமே சிறந்ததாகும். அறிஞர்கள், ஆராய்ச்சியுள்ளவர்கள், இல்லறம்
துறவறம்
இரண்டிலே
இல்லறமே சிறந்தது என்று கூறினர். ஆதலால் அதுவே
அனபுடன்
விரும்பத்தக்கதாகும்.
‘‘உள்நாட்டம் சான்றவர் தந்த நசையிற்று. (பா.53)
ஆழ்ந்த ஆராய்ச்சி நிறைந்த அறிஞர்கள் சிறந்தது என்று ஏற்படுத்தியது;
அன்புடன்
கூடியது’’
என்பது இவ்வுண்மையை விளக்கும்.
பழக்க வழக்கங்கள்
பண்டைக்காலப் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் இந்நூலால்
அறியலாம்.
பசுக்கள் இடையர்கள் ஊதும் கொன்றைக்குழலின் இனிய ஓசையைச்
சுவைக்கும்.
அவர்கள் அக்குழலை ஊதினால் பசுக்கள் கூடும்; அவர்கள்
ஊதிக்கொண்டே சென்றால்,
அவர்களைத் தொடர்ந்து
அவைகள் செல்லும்.
‘‘கொன்றைக்
குழல் ஊதிக் கோவலர் பின் நிரைத்துக்
கன்று அமர் ஆயம்புகுதர
(பா.22)
கொன்றைக்குழலை ஊதிக்கொண்டு போகும் இடையர்கள் பின்னே,
வரிசையாக கன்றை
விரும்பும் பசுமந்தை ஊர்க்குள் நுழைய’’ என்பதனால்
பசுக்களின் இசையுணர்ச்சியை
அறியலாம்.
தும்மல் இயல்பாக
வருவதன்று; யாரோ நம்மை நினைப்பதனால்தான்
தும்மல்
வருகின்றது. என்பது
நம்பிக்கை.
|